போலி பிளாஷ் டிரைவுகளை கண்டுபிடிக்க...

256GB, 512GB, 640GB என மிகப்பெரிய அளவுகளில் USB பிளாஷ் டிரைவுகள் மலிவான விலையில் சந்தையில் கிடைத்தால் நாம் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிவிடுகிறோம்.

கணிணியில் இணைத்துப் பார்த்தால் அதுவும் 640GB USB Flash drive detected என பெருமையாக கூறிவிடுகின்றது. கோப்புகளை காப்பி செய்ய ஆரம்பித்தால் 2GB அல்லது 4GB-க்கு மேல் காப்பியாக திணறும், கடைசியில் இருக்கின்ற கோப்புகளை கரப்ட் செய்துவிட்டு டிரைவும் செத்துவிடும்.இது தான் போலி பிளாஷ் டிரைவுகளின் குணாதிசயம். இந்த போலி டிரைவுகளில் மறைவாக ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறிய புரோகிராம் அதை உங்கள் கணினிக்கு 640GB-யாக காண்பித்து பொய்சொல்லும்.ஆனால் நிஜத்தில் அங்கே 2GB-யோ அல்லது 4GB-யோ தான் இருக்கும். சீனாவிலிருந்து இது போன்ற போலி பிளாஷ் டிரைவுகள் உலகமெங்கும் இறக்குமதியாகின்றன.

சோனி,கிங்ஸ்டன் என பிரபலமான பெயர்களில் இவை லோக்கல் சந்தைகளில் கிடைக்கின்றன.உங்களிடம் ஏற்கனவே இருக்கும் USB பிளாஷ் டிரைவ் ஒரிஜினலா அல்லது போலியா என தெரிந்துகொள்வது எப்படி? H2testw என ஒரு இலவச மென்பொருளை நீங்கள் கீழ்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம். இதை உங்கள் கணிணியில் unzip செய்து டார்கெட்டாக உங்கள் USB பிளாஷ் டிரைவ் அல்லது மெமரிகார்டை காண்பித்து (உங்கள் டிரைவை empty ஆக்கினபின்) ஓடவிட்டால் அது சிறிது நேரம் கழித்து உங்கள் டிரைவின் லட்சணத்தை கூறிவிடும்.Test finished without errors என்றால் நீங்கள் ஏமாறவில்லை என அர்த்தம்.The media is likely to be defective எனச் சொன்னால் போலி என அர்த்தம்.
பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"