மைக்ரோசாப்ட்டின் மால்வேர் கிளீனர்


ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்ய முடியா தவர்கள், இன்டர்நெட் இணைப்பு இல்லாததனால், வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை அப்டேட் செய்திட முடியாதவர்கள், இதனைப் பயன்படுத் தலாம். மேலும் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்பட முடியாமல், முடக்கப்படும் நிலையிலும் இதனைப் பயன்படுத்தலாம். இது ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்கு இணையாகச் செயல்பட்டாலும், அதற்குப் பதிலாக அனைத்து செயல்பாடு களையும் மேற்கொள்ளாது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

சிஸ்டம் ஸ்வீப்பர் விண்டோஸ் 32 மற்றும் 64 பிட் வகைகளுக்கெனத் தனித்தனியே தரப்பட்டுள்ளது. தேவைப் படுபவர்கள் தங்களின் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற் கேற்ற வகையில் டவுண்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மைக்ரோசாப்ட் வழங்கும் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராமில் பயன்படுத்தப்படும் ஆண்ட்டி வைரஸ் இஞ்சின் தான், ஸ்வீப்பர் விண்டோஸ் புரோகிராமிலும் பயன்படுத்தப்படுகிறது.

சென்ற மாதம், மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் சேப்டி ஸ்கேனர் என்ற புரோகிராமினை வைரஸ், ஸ்பைவேர் மற்றும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை கண்டறிய வெளியிட்டது. இந்த சேப்டி ஸ்கேனர், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமுடன் இணைந்து செயல்படும் விதத்தில் அமைக்கப்பட்டது.

மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் கூறும் இரண்டு மால்வேர் எதிர்ப்பு சாதனங்களும், மைக்ரோசாப்ட் தன் பணியினைக் குறைத்துக் கொள்வதற்காக என வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மென்பொருள் தரவிறக்க கீழே சொடுக்கவும்.



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"