தற்காலிக பயன்பாட்டிற்கான மின்னஞ்சல் முகவரி


புதிய இணையத்தளங்களில் உறுப்பினராகும் போது, நாம் அளிக்கும் இ மெயில் முகவரியை ஸ்பாமர்கள் திருடி தேவையற்ற இ மெயில்களை அனுப்பி வைப்பார்கள். இதனை தவிர்க்க பொய்யான மின்னஞ்சல் முகவரியை அளித்தால், நம் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் உறுப்பினராக உறுதி செய்வதற்கான மின்னஞ்சலை பெற முடியாது. இத்தகைய சிக்கல்களுக்கு விடை சொல்லும் விதமாக அமைந்துள்ளது இந்த 1 மணிநேர மின்னஞ்சல் முகவரி.

1 மணிநேரத்திற்கு மட்டுமே ஒரு புதிய மின்னஞ்சல் முகவரி அளித்து நாம் விருப்பப்படும் இணையத்தளத்தில் உறுப்பினரானவுடன் தானாக அழிந்து போகும் விதத்தில் அமைந்துள்ளது.

நீங்கள் இந்த இணையதளத்தில் இருந்து ஒரு உறுதிப்படுத்தல் இணைப்பு உட்பட உங்கள் புதிய இன்பாக்ஸ்க்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்கள் பெற்றுக்கொள்ள மற்றும் திறக்க முடியும்

இந்த இணையத்தளத்திற்கு சென்று இலவசமாக உறுப்பினராகி மின்னஞ்சல் முகவரியை பெறலாம். ஆனால் நமது வேலையை 1 மணிநேரத்தில் முடித்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை 1 மணிநேரத்தில் நமது வேலை முடியவில்லை என்றால் மீண்டும் ஒரு மணி நேரம் மின்னஞ்சல் முகவரியின் ஆயுட்காலத்தை நீட்டிக்க செய்யலாம். ஆனால் அதற்குள் நமது வேலையை முடித்து கொள்ள வேண்டும் இல்லையேல் நமது முகவரி தானே அழிந்து போகும் வேலையும் தடைப்படும்.

கொரில்லா மெயில் பதிவு மட்டுமே அந்த சந்தா எந்த குறைந்தபட்ச கட்டணம் இல்லை என்றாலும் மின்னஞ்சல்களை அனுப்ப முடியும்.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"