கணினி விரைவில் ஸ்டார்ட் ஆக


உங்கள் கணினியில் நிறைய மென்பொருட்களை  நீங்கள் இன்ஸ்டால் செய்து இருப்பீர்கள். அவற்றில் சில கம்ப்யூட்டர் ON ஆன உடன் உங்கள் விண்டோவில் வந்து நிற்கும். சில உங்களுக்கு தெரியமாலயே ஸ்டார்ட் ஆகி இருக்கும். ஒவ்வொரு முறையும் இவற்றை நாம் close செய்வதற்க்கு பதிலாக அவை automatic ஆக ஸ்டார்ட் ஆவதை நிறுத்தி தேவையான போது மட்டும் எடுத்து பயன்படுத்த இது உதவும்.இதனால் கம்ப்யூட்டர் ஸ்பீட் ஆனது அதிகரிக்கும். RAM ஆனது இடைஞ்சல் எதுவும் இன்றி வேலை செய்யும்.

XP பயனர்களுக்கு
 Run-- msconfig
அதில் Start Up என்பதை தெரிவு செய்யவும்.இதில் உங்கள் கம்ப்யூட்டர் ON ஆனவுடன் என்ன ப்ரோக்ராம்கள் ஸ்டார்ட் ஆகின்றன என்பது கொடுக்கப்பட்டு இருக்கும். இதில் உங்களுக்கு அடிக்கடி தேவை இல்லாத ப்ரோக்ராம் இருந்தால் அதனை Uncheck செய்து இப்போது OK கொடுத்து விடவும்.இப்போது restart செய்ய சொல்லி வரும். செய்து விட்டு பாருங்கள் அவை இப்போது Automatic ஆக ஸ்டார்ட் ஆகாது.

Windows 7 பயனர்களுக்கு
 Run--msconfig
புதிய விண்டோவில் Start up என்பது கடைசிக்கு முந்தையதாகவே இருப்பதை கவனிக்கவும். இதில் அடிக்கடி பயன்படுத்தாத ப்ரோக்ராம்களை Uncheck செய்து விடவும். பின்னர் OK கொடுத்து விட்டு ரீஸ்டார்ட் செய்யவும்.

எந்த அளவுக்கு நீங்கள் Uncheck செய்கிறீர்களோ அது உங்கள் கம்ப்யூட்டரின் RAM வேகத்தை அதிகமாக்கும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"