தீங்கு இழைக்கும் மென்பொருளை அழிக்க...


இலவச மென்பொருட்களை தரவிறக்கி, உபயோகிக்கும் போது சில MALCIOUS மென்பொருட்களால் நம்முடைய கணினி பாதிப்படைய வாய்ப்புள்ளது. Anti Virus மென்பொருளாலும் இவ்வகை, MALCIOUS மென்பொருட்களை கண்டறிய முடியாமல் போவதால் நமது கணினி மேலும் மேலும் பாதிப்படைந்து நாளடைவில் முற்றிலும் செயலிழந்துப்போகும் நிலை ஏற்படும்.

இந்த பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக MICROSOFT நிறுவனம், MALCIOUS மென்பொருட்களை கண்டறிந்து நீக்குவதற்காக ஒரு மென்பொருளை வெளியிட்டு உள்ளனர்.

Malcious Software Removal என்னும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் பதியும் போதே இந்த மென்பொருள் கணினியை ஸ்கேன் செய்ய ஆரம்பித்து விடும்.

கணினியின் அனைத்து மென்பொருட்களுடன், Executable File -கள் யாவும் ஸ்கேன் செய்யப்படும்.அப்படி தீங்கு விளைவிக்கக்கூடிய மென்பொருட்கள் ஏதேனும் கணினியில் கண்டறியப்பட்டால்,அதை உடன் அழித்து விடும்.

கணினியில் தீங்கு விளைவிக்கும் எந்த MALCIOUS மென்பொருளும் இல்லாத பட்சத்தில், அதாவது கணினியின் அனைத்து மென்பொருட்களும் நல்ல நிலையில் இருக்குமேயானால், 'கணினியின் எந்த மென்பொருளும் பாதிக்கப்படவில்லை'என்ற செய்தியையும் தரும்.

மென்பொருள் தரவிறக்க கீழே சொடுக்கவும்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"