160by2
பெரும்பாலானவர்களால் உபயோகிக்கப்படும் முதல் இடத்தில் இருக்கும் இலவச எஸ்.எம்.எஸ் இணையதளம் இதுதான். இந்த இணையதளத்தில் இந்தியா மட்டுமல்லாது குவைத், சிங்கப்பூர், மலேசியா,யு.ஏ.இ என வெளிநாடுகளில் உள்ள மொபைல்களுக்கும் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.இந்த இணையதளம் மொபைலுக்காகவே பிரத்யேகமாக தரும் அப்ளிகேஷனை நமது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டால் கணினி இல்லாமலேயே நமது மொபைலிலிருந்தே மற்றவர்களுக்கு இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம்.இது ஜாவா வகையை சார்ந்த அப்ளிகேஷன் என்பதால் நோக்கியா,சாம்சங்,சோனிஎரிக்சன்,எல்.ஜி,மோட்டோரோலா என பெரும்பாலான கம்பெனிகளின் மொபைல்களுக்கு இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் செய்கிறது.பிளாக்பெர்ரி,ஐ-போன்,ஆன்ட்ராய்டு ஆகிய ஒ.எஸ் கொண்ட மொபைல்களுக்கும் அதன் மார்க்கெட்டுகளில் தனி அப்ளிகேஷனாக கிடைக்கிறது.
இந்த அப்ளிகேஷன் நமது மொபைலின் போன்புக்கில் உள்ள நம்பர்களை தானாகவே இணைத்துக் கொள்வதால் நாம் எஸ்.எம்.எஸ் அனுப்புவது இன்னும் எளிமையாகிறது.இதன் ஒரேகுறை 80 எழுத்துகளில் மட்டுமே எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்
way2sms
மொபைலுக்கான பிரத்யேகமான அப்ளிகேஷனை இவர்கள் இன்னும் தரவில்லை என்றாலும் நமது மொபைலின் பிரௌசரில் http://m.way2sms.com என்று டைப் செய்து இந்த இணையதளம் மூலம் நாம் மற்றவர்களுக்கு அளவற்ற இலவச எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.இங்கு வெளிநாடுகளுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி இல்லை.கூடுதல் சேவையாக நமது இமெயில்களை மொபைலில் படித்துக் கொள்ளும் வசதியையும் தருகிறார்கள்.
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்
jaxtr
120 எழுத்துகளை மட்டுமே டைப் செய்து மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ள முடியும்.மூன்று கட்டண திட்டங்கள் உண்டு அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்தால் குறைந்த கால்கட்டணங்களில் வெளிநாடுகளுக்கு பேசிக்கொள்ளவும்,இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளவும் முடியும்.இதில் இருக்கும் free connect மூலம் இலவசமாக பேசிக்கொள்ளலாம்.பிளாக்பெர்ரி,ஐ-போன்,ஆன்ட்ராய்டு ஆகிய ஒ.எஸ் மொபைல்களுக்கு பிரத்யேகமாக அப்ளிகேஷனும் உண்டு.
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்
mysmsindia
way2sms இணையதளம் போல் உள்ளது. இந்தியாவுக்குள் எந்த மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.தனியாக மொபைலில் பயன்படுத்த அப்ளிகேஷன் இல்லை.
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்
mycantos
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்
sms440
மிக நீளமான எஸ்.எம்.எஸ் அனுப்ப உதவும் இணையதளம் இதுதான்.இணையதளத்தின் பெயரைப் போலவே கிட்டத்தட்ட 440 எழுத்துகளை டைப் செய்து அனுப்பலாம்.மொபைலுக்கான தனி அப்ளிகேஷன் இல்லை.
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்
ibibo
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்
mobiyard
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்
மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்
skebby
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்