தமிழ் உட்பட பல இந்திய மொழி வலைப்பக்கங்கள் யுனிகோட் வடிவமைப்பில் உருவாக்கப் பட்டிருந்தாலும், ஒரு சில வலைப்பக்கங்கள், யுனிகோட் அல்லாத பழைய எழுத்துருக்களை பயன்படுத்தியே உருவாக்கப்படுவதால், நமது உலாவிகளில் அந்த பக்கங்களை வாசிப்பதற்கு, அந்த குறிப்பிட்ட எழுத்துருவை நமது கணினியில் நிறுவியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.இல்லையெனில் அவற்றை வாசிப்பது சாத்தியமற்று போகிறது.
இந்த பிரச்சனைக்கு Google Chrome உலவியில் எளிதான,சரியான இலவச தீர்வாக அமைவது Padma Transformer for Indic Scripts நீட்சியாகும்.
இனி அந்த வலைப்பக்கங்களை திறக்கையில், எழுத்துருக்களை நிறுவாமலேயே தெளிவாக வாசிக்க இயலும்.எழுத்துருக்களை தரவிறக்க தேவையில்லை.