பேஸ்புக் மூலம் கோப்புக்களை பகிர்வது எப்படி ?


பேஸ்புக் குழுமங்களின் (Facebook Groups) மூலம் அனைத்துவிதமான கோப்புகளையும் பகிரும் வசதியை தந்துள்ளது.குழுமத்தில் மூலம் தகவல்களை பரிமாறும் பகுதிக்கு சென்றால் அங்கே Upload File என்றொரு தேர்வு இருக்கும்.அதை கிளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள கோப்புக்களை தேர்வு செய்து Upload என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.


அதிகபட்சமாக 25 MB அளவுள்ள கோப்புகளை பதிவேற்றலாம்.பதிவேற்றிய கோப்பை தரவிறக்கம் செய்ய Doc என்னும் Tab-ற்கு பதிலாக Files என்ற Tab இருக்கும்.அதை கிளிக் செய்தால் பதிவேற்றிய அனைத்து கோப்புகளும் அங்கே இருக்கும். அதில் + பட்டனை கிளிக் செய்து கோப்புகளை தரவிறக்கலாம்.

பேஸ்புக் குழுமங்களின் மூலம் மட்டுமே தகவல்களை இதன் மூலம் பரிமார முடியும்.ஆனால் குழுமம் இல்லாத பேஸ்புக் பயனாளர்கள் கோப்புக்களை எப்படி பரிமாறுவது? இதற்காக கீழ்க்கண்ட கோப்புக்களை பரிமாற்றும் அப்ளிகேசன் உங்களுக்கு உதவும்.பேஸ்புக் உபயோகிக்கும் அனைவரும் சுமார் 2GB வரையிலான கோப்புக்களை பகிர்ந்து கொள்ளலாம்.


கோப்புக்களை பரிமாற முதலில் கீழே உள்ள அப்ளிகேசனோடு பேஸ்புக்கில் இணைந்திடுங்கள்.அப்ளிகேசன் செல்ல கீழே சொடுக்குங்க..


இந்த அப்ளிகேசன் பக்கத்திற்கு சென்று ஒரு புதிய போல்டரை உருவாக்கி அதில் Add File ஐ சொடுக்கி கோப்புக்களை பதிவேற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்..


கீழே உள்ள படத்தை போல கோப்பு பதிவேற்றப்பட்டு இருக்கும்.


இப்படி பதிவேற்றிய கோப்புக்களை காண அப்ளிகேசன் பக்கத்திற்கு சென்று filefly அப்ளிகேசனை தேர்வு செய்து பார்த்தால் நீங்கள் பதிவேற்றிய கோப்பினை காணலாம்.

அப்ளிகேசனில் காணப்படும் போல்டரை சொடுக்குவதன் மூலம் பதிவேற்றிய கோப்பினை காணலாம்.




பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"