பல்வேறு தளங்களின் தேடல்கள் ஒரே பக்கத்தில்


ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் ஒரே சமயத்தில் தேட இந்த இணைய பக்கத்தை பயன்படுத்தலாம்.

கூகுல் தவிர வேறு பல தேடியந்திரங்களிலும் தேடிப்பார்க்க வேண்டிய தேவை இருப்பவ‌ர்கள் இந்த தேடியந்திரத்தில் தங்களுக்கான குறிச்சொல்லை டைப் செய்தால் கூகுல் தவிர விக்கிபீடியா,ஆன்சர் டாட் காம்,அமேசான்,பிங்,யூடியூப்,யாஹூ ஆகிய தேடியந்திரங்களில் தேடும் வாய்ப்பை அளிக்கிறது.

ஒவ்வொரு தேடியந்திரத்திலும் அந்த குறிச்சொல்லுடன் தொடர்புடைய வேறு பல குறிச்சொற்களையும் இந்த தேடியந்திரம் பரிந்துரைக்கிறது.இந்த பரிந்துரையில் நமக்கு தேவையான குறிசொல் பொருத்தமாக இருந்தால் அந்த குறிச்சொல்லில் கிளிக் செய்து தகவல்களை பார்க்கலாம்.

இங்கே குறிப்பிட்டப்பட்டிருக்கும் தேடிய‌ந்திரத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தும் நமக்கு தேவையான குறி சொல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

தேவையானதை தேட கீழே சொடுக்கவும்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"