3Dயில் உருவாகும் "பலான" படம்?


3Dதொழில்நுட்பத்தில் த்ரில்லர் படம் வந்தாச்சு... 3D டிவி வந்தாச்சு... என விஞ்ஞானம் வளர.. அதை கிளு கிளு சமாச்சாரத்துக்கும் பயன்படுத்தினால் என்ன என்று தயாரிப்பாளர் யோசித்ததன் விளைவு...

3D எஃபெக்டில் செக்ஸ் படம் ஒன்று தயாராகிறது!

ஹாங்காங்கை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஸ்டீபன் ஷி யூ என்பவர்தான் இந்தப் படத்தை எடுத்து வருகிறார்.

ரூ.15 கோடி செலவில் பிரமாண்டாமாய் (?!) தயாரிக்கப்பட்டு வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகப் போகிறதாம். சீனாவின் சுயாட்சி மாகாணமான ஹாங்காங்கில்தான் இந்தப் படத்தை முதலில் திரையிடப் போகிறார்களாம்.

அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்தப் படத்தைப் பார்க்க சீன ரசிகர்கள் ஏக ஆர்வம் காட்ட வருகிறார்கள். ஆனால் மெயின்லேண்ட் சீனாவில் இப்போதைக்கு அனுமதி கிடையாதாம். எனவே ஹாங்காங் போய் இந்தப் படத்தைக் காண சீனர்கள் பெரும் ஆர்வம் காட்டிவருகிறார்களாம். முன்பதிவு ஆரம்பித்துள்ளதால், டிக்கெட் வாங்க முண்டியடிப்பதாக சீன தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"