ஸ்கைப் - பயன்படுத்துவது எப்படி?


ஸ்கைப் எனப்படும் ஒரு எளிய மென்பொருள் இன்றைய தொலைதொடர்பு யுகத்தில்மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. இந்த மென்பொருளானது VoIP எனப்படும்நவீனத் தொழில்நுட்பத்தைக் கையாள்கிறது.நடைமுறையில் நாம் பயன்படுத்தும் தொலைபேசிக் கருவிகளை விட அதி நவீனவசதிகளைக் கொண்டதாக இருந்தாலும், பயன்படுத்தும் செலவுடன் ஒப்புநோக்கும்போது மிக மிக மலிவானது.

நமது மடிக்கணினியில் ஸ்கைப் மென்பொருளை நிறுவி இருந்தால், நாம் எங்கெங்குபயணம் செய்கிறோமோ, அங்கெல்லாம் ஸ்கைப் பயன்படுத்தலாம்.இதைப் பயன்படுத்துவதற்காக உங்களிடம் ஒரு கணினி, வேகமான இணைய இணைப்பு,ஒலிப்பானுடன் கூடிய ஒலிவாங்கி, மேலும் ஒரு வெப்கேமரா தேவைப்படும்.ஸ்கைப் இணையதளத்தில் இருந்து இந்த இலவச மென்பொருளைத் தரவிறக்கம் செய்துகணினியில் நிறுவ வேண்டும்.

ஸ்கைப் உடன் ஒரு பயனர் கணக்கைத் துவங்க வேண்டும்.இதில் பல்வேறு இலவச சேவைகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.மேலும் ஸ்கைப்பில் உள்ளே / வெளியே என இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளன.அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும் எனில் பயனர் கணக்கை உருவாக்கும்போதுஉங்கள் கடனட்டை பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.பேபால் தளம் மூலமாகவும் உங்களது ஸ்கைப் பயனர் கணக்கில் பணம் செலுத்தலாம்.உங்களது பெயர், மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு உங்களுக்கான கணக்கைத் துவங்கிய பிறகு மற்ற நண்பர்களது முகவரிகளை உள்ளிட்டு அவர்களை உங்களுடன் இணைத்துக்கொள்ளவும்.இந்தச் செயல்பாட்டுக்கு நீங்கள் எதுவும் பணம் செலுத்தத் தேவையில்லை.ஸ்கைப் வெளியே எனப்படும் சிறப்பைப் பயன்படுத்தி செல்பேசி, வீட்டுத்தொலைபேசிகளுக்குப் பேசி மகிழலாம்.

வெகுதொலைவில் உள்ளவர்களுடனும், வெளிநாட்டில் உள்ளவர்களுடனும் தொடர்புகொள்வதற்கு பணம் செலுத்த வேண்டி வரும். ஆனால் இது வழக்கத்தில்உள்ள விட்டுத் தொலைபேசி, செல்பேசிக் கட்டணங்களுடன் ஒப்பிடும்போது மிகமிகக் குறைவானதாக உள்ளது.ஸ்கைப் உள்ளே என்கிற சிறப்பியல்பைப் பயன்படுத்தும்போது ஒரு வருடத்திற்குஎவ்வளவு சந்தாத்தொகையோ அதை ஸ்கைப் நிறுவனத்திற்குச் செலுத்திவிடவேண்டும்.

நிறுவனமானது உங்களுக்காக ஒரு தனிப்பட்ட தொலைபேசி எண்ணைக் கொடுப்பார்கள்.அதை நீங்கள் வெளிநாடு வாழ் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். அவர்கள் உங்களுடன் இலவசமாக பேசி மகிழ இது ஒரு வாய்ப்பு.உங்களுக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு பணம் செலவாகாது. ஏனெனில் நீங்கள்ஸ்கைப்பிற்கு வருடச்சந்தா செலுத்திவிட்டீர்கள். இதுவே ஸ்கைப் உள்ளேஎன்கிற அம்சம்.வாய்ஸ் மெயில் வசதியும் இதில் உண்டு. ஆனால் அதற்காக மேலதிகப் பணம்செலுத்த வேண்டும்.

நீங்கள் கணினியில் இணைய இணைப்பின்றி இருக்கும்போது யாரேனும் உங்களுக்குவாய்ஸ் மெயில் அனுப்பி இருந்தால், அதை எப்போது இணையத்துடன் இணைகிறீர்களோஅப்போதே பெற்றுக்கொள்ளலாம்.கையடக்கக் கணினிகளுக்காகவும் தனிப்பட்ட ஸ்கைப் மென்பொருள் அதே தளத்தில்கொடுக்கப்பட்டுள்ளது. அது தேவையெனில் அதையும் தரவிறக்கிப்பயன்படுத்தலாம்.குறைந்த செலவில் அதிக நேரம் வெளி நாட்டு நபர்களுடன் பேசி மகிழ அருமையானபயன்பாடு இது.

மேலதிக விவரங்களுக்கும், மென்பொருள் தரவிறக்கத்துக்கும் இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"