நிறைமாத பசுவினை கற்பழித்த காம கும்பல்!!


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் பகுதியை சார்ந்த பள்ளக்காடு தோட்டத்தில் உள்ள நடராஜன் என்பரின் நிறைமாத பசு மாட்டை 6 பேர் சேர்ந்து கற்பழித்துள்ளார்கள்! அனைவரும் மிகுந்த குடிபோதை பார்ட்டிகள்!குடி போதை ஒருவனை மிருகமாக மாற்றி விட்டு மற்றொரு மிருகத்தை புணரும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது?

மனிதன், உறவு முறை தவறிய உறவு! வயது வித்தியாசம் தெரியாமல் இளம் குழந்தையிடம் காமம் என ஆரம்பித்து இப்பொழுது மிருகத்தையே மிருகத்தனாமாக புணரும் அவலம் வந்துவிட்டது ஏன்?

மனிதன் தான் மனிதன் இல்லாத உயிரினத்துடன் புணரும் இச்சைக்கு ஷூஃபிலியா (Zoophlia)எனவும் மனிதன் விலங்குடன் புணரும் செயலுக்கு பெஷ்ட்டியாலிட்டி (Bestiality) என்றும் அறிவியலாளர்கள் பகுத்து கூறியிருக்கிறார்கள். எப்படி பிரித்திருந்தாலும் பல நாடுகள் இச்செயலை குற்றம் என சட்டம் இயற்றியுள்ளார்கள். இந்தியாவில் இந்திய தண்டனை சட்டம் IPC377 ல் குற்றம் என கூறப்பட்டுள்ளது.


இந்த செயல் “ மனசிதைவு நோயின் “ வெளிப்பாடு என ஆராய்சியாளர் தெரிவிக்கிறார்.(Stephanie LaFarge, an assistant professor of psychiatry at the New Jersey Medical School) இந்த நபர்களை சிகிட்சை அளிக்கப்பட வேண்டிய மன நோயாளி என அநியாயத்திற்கு கருணை பார்வை காட்டுகிறார்.மற்றொரு ஆராய்சியாளர் (Kinsey) ஏடக்கூடமாக 4% ஆண்கள் 3.5% பெண்கள் இயற்கைக்கு மாறான உறவில்தான் இருக்கிறார்கள் என விலங்குகளின் தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்!அவர்களில் 50% பண்ணை அருகில் உள்ளவர்கள் என கூடுதல் தகவலும் தருகிறார்.

Nancy Frida என்ற ஆராய்சியாளர் 190 பெண்களிடன் பெற்றப் புள்ளி விவரப்படி அதில் 23 பேர் விலங்குடன் உடல் உறவு கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கிறார்.விலங்குடன் உடல் உறவு தற்பொழுது ஏற்பட்டது இல்லை!

8000 BC லிருந்து இந்த விதமான உடல் உறவு இருந்ததற்கான அத்தாட்சியாக வடக்கு இத்தாலியில் காணப்பட்ட ஓவியம் உள்ளது..

 இந்தியாவில் உள்ள கஜோரோ கோயில் வெளிபுறத்தில் உள்ள சிற்பம் ஒருகுதிரையுடன் ஒரு ஆணின் இணைவு காட்சி ஒரு சாட்சி!


விலங்குடன் புணர்தல் மனிதர்களுக்கு ஆரோக்கியம் இல்லை!விலங்கின் எச்சில், சிறுநீர், கழிவு, யோணியின் நீர் போன்றவைகளின் மூலம் புரூசிலோசிஸ், க்க்யூ காய்ச்சல், எலி காய்ச்சல் , டாக்சோகேரிஸ் (Brucellosis, Q fever, Leptospirosis, and toxocariasis) போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்ணின் பெண் உறுப்பில் செலுத்தபடும் விலங்கின் விந்து தீவிர ஒவ்வாமை ஏற்படுத்தி மரணம் கூட நிகழாலாம்.

மிருகத்தின் விந்து, பெண்ணையோ, ஆணின் விந்து பெண் விலங்கையோ கருவுர செய்யுமா? என்றால் முடியாது! குரோமசோம்களின் முரண்பாடு! மேலும் ஒரு இனத்தின் கருமுட்டைக்குள் நுழைய அந்த இனத்தின் விந்தின் தலை பகுதியில் சங்கேத குறியீடு ( (Password code) உள்ளது. அது இல்லாமல் கருவை துளைத்து கருவுற செய்ய முடியாது!

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"