அதிகமாக உச்சக்கட்டத்தை அடையும் நாட்டினர்


உலக அளவில் பாதுகாப்பான உறவைக் கடைப்பிடிப்பதில் இந்தியா 3வது இடத்தில் இருக்கிறதாம். அதாவது ஆணுறைகள் பயன்பாட்டில் உலக நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளதாம்.

இந்தியாவில் 71 சதவீதம் பேர் உடல் உறவின் போது ஆணுறைகளைப் பயன்படுத்துகிறார்களாம். இந்த வரிசையில் முதலிடத்தில் சீனா உள்ளது. அங்கு 77 சதவீதம் பேர் ஆணுறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஹாங்காங் 73 சதவீதத்துடன் 3வது இடத்தில் இருக்கிறது.

உறவின்போது செய்யும் முன் விளையாட்டுக்களுக்கு நேரம் செலவிடும் விஷயத்தில் நம்மவர்கள் உலக அளவில் 5வது இடத்தில் உள்ளனர். அதாவது 19.3 நிமிடங்கள் அளவுக்கு முன்விளையாட்டுக்களில் இந்தியர்கள் ஈடுபடுகின்றனராம்.அதேசமயம் உடல் உறவுக்கு இந்தியர்கள் எடுத்துக் கொள்ளம் நேரம் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளதாம். அதாவது சராசரியாக 15.1 நிமிடங்களே இந்தியர்கள் இதற்காக எடுத்துக் கொள்கின்றனராம்.

கொலம்பியர்கள்தான் உறவில் கில்லாடிகளாக உள்ளனர். அதிக அளவில் இவர்கள்தான் உறவு வைத்துக் கொள்கின்றனராம். 89 சதவீதம் பேர் வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் உறவு கொள்கின்றனர். 2வது இடத்தில் இந்தோனேசியாவும், ரஷ்யாவும் உள்ளன.

உறவின் போது எட்டப்படும் உச்சகட்டமான ஆர்கஸத்தை அடைவதில் ஹங்கேரியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். அதாவது 75 சதவீதம் பேருக்கு ஆர்கஸம் ஏற்படுகிறதாம். 2வது இடத்தில் கிரேக்கர்கள் உள்ளனர். 3வது இடம் ஸ்பெயின் நாட்டவருக்கு.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"