பெண்களின் பிராவின் நோக்கம் என்ன?


உடலில் கொழுப்புத் திரட்சிகள் கொண்டுள்ள பெண்தான் குழந்தையைப் பெற்று வளர்க்க சக்தியுள்ள வலிமையான பெண். இதனால் பருத்த மார்பு கொண்ட பெண் வம்சாவளி நீட்டிக்க வேண்டும் ஆணுக்குப் பிடித்தமானவளாய் உள்ளாள். பருத்த முலைகள் இவ்வாறு பரிணாமம் தரும் பச்சை விளக்குகள் என்பது மற்றொரு சாரார் கருத்து.

சாலையில் பச்சை விளக்கு போல் இந்த நூற்றாண்டிலும் மனிதனின் ஆழ்மனம் துணையைக் கண்டதும் சில சமிக்ஞைகள் தருகிறது. துணைத்தேர்வைப் பொறுத்த வரையில் பெண்ணின் மார்பு, இடை, புட்டம் போன்ற சில அடிப்படைக் கூறுகள் பெரும்பான்மையான ஆண்களுக்குப் பச்சை விளக்குகள். இவை மறைக்கப்படும் போது உதடுகள், கண்கள், கூந்தல் ஆகியவை கவனத்துக்குள்ளாகின்றன.

பிராவின் நோக்கம் ஆரோக்கியம் அல்ல, வர்த்தக/ஆணாதிக்க அழகியல் தான். பிரா கணுக்ககளை மறைத்தாலும், அது கூர்மையான, மேலெழுந்த, பருமனில் கச்சிதமான ஒரு மார்பு வடிவத் தோற்றம் தருகிறது. சுருக்கமாய்ச் சொல்வதானால் பிரா மார்பை மறைப்பதகற்காக அல்ல, மேலும் அழகுபடுத்துவதற்கானது. பிரா ஒழுக்கவியலாளனின் தேர்வல்ல. மாறாக, பெண்ணுடலை குழந்தை உற்பத்தி ஆலையாகக் காணும் சராசரி ஆணின் தேர்வு.

பிரா அணிவதால் தொய்வுற்ற மார்புகள் உறுதி பெற்று நிமிரும் என்றும், இவ்வாறு இதை அணியாதோரின் மார்புகள் துவண்டு தொங்கிப் போகும் என்றும் இரு வினோதமான பொய்கள் படித்த பட்டதாரிப் பெண்கள் மத்தியிலும்கூட நிலவுகிறது.



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"