பெண்ணைக் கொன்று சமைத்து விற்ற பெண்


2 பெண்களையும் ஒரு சிறுமியையும் கொலைசெய்து அவர்களை குளிரூட்டும் பெட்டியில் வைத்து பின்னர் அவர்களின் சதைத் துண்டுகளைவெட்டிச் சமைத்து அதனை விற்றுள்ளார் ஒரு பெண்மணி ! இது பிரேசில் நாட்டில் நடந்துள்ளது. இவர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் அல்ல. கணவரும் மனைவியும் மற்றும் மேலும் ஒரு பெண்ணுமாக இணைந்து இச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் வைத்திருக்கும் ரெஸ்ரோரண்டில், சாப்பிட வரும் நபர்களுக்கு சமைக்கப்பட்ட மனித இறைச்சியை வழங்கியுள்ளனர்.


இவர்கள் உணவகத்தில் விற்கப்பட்ட உணவுகளில் இந்த மனித இறைச்சி கலக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள இவரது உணவகத்தில் உணவை வாங்கி அருந்திய அனைவரையும், மற்றும் உலக மக்கள் அனைவரையும் இவரது செயல் பெருவியப்பில் ஆழ்த்தியுள்ளதோடு, அருவருக்கச் செய்துள்ளது. இவர் எவ்வாறு கைதானார் என்பது தொடர்பாக பிரேசில் பொலிசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஆனால் இந்த பெண்ணின் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் கொல்லப்பட்ட இருவரது உடலங்கள் காணப்பட்டுள்ளது. அவர்களின் தொடைகள் மற்றும் இதர ப் பகுதிகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் உள்ள கிரான்கஸ் என்னும் கிராமம் இச் செய்திவெளியான நாளில் இருந்து ஆட்டம் கண்டுள்ளது. இக் கிராமத்தில் 2008ம் ஆண்டு ஒரு சிறுமி காணமல் போயுள்ளார். இச் சிறுமியையும் இவர்களே பிடித்து கொன்று சமைத்துள்ளார்கள் என தற்போது நம்பப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைகளையும் பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"