MS-Word-ல் text ஐ table செய்யலாம்

முதலில் டேபிளாக மாற்ற வேண்டிய டெக்ஸ்ட்டை தேர்வு செய்துகொள்ளவும்.பிறகு Insert=>table=>convert text to table என்பதை கிளிக் செய்யவும்.தோன்றும் விண்டோவில் separate text at என்பதில் உள்ள ஆப்சன்களில் உங்களுக்கு டேபிள் எப்படி பிரிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

உதாரணமாக ஒவ்வொரு வார்த்தையும் ஒரு coloum ஆக மாற்றப்பட வேண்டும் எனில் other என்பதில் கிளிக் செய்து அந்த கட்டத்தில் ஒரு Sapce மட்டும் தட்டுங்கள்.ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு space இடைவெளி இருக்கும் என்பது பொதுவான விதி.மேலும் உங்களுக்கு எத்தனை column எத்தனை row இருக்க வேண்டும் என்பதை Number of columns, Number of Rows என்பதில் எண்களை உள்ளிட்டு நீங்கள் தீர்மானிக்கலாம். இறுதியாக ok என்பதைச் சொடுக்கினால் நீங்கள் விரும்பியபடி உங்களுடைய டெக்ஸ்ட்டானது டேபிளாக மாற்றப்பட்டிருக்கும்.



இதில் tabs என்பதை தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு டேப் இடைவெளிக்கும் உள்ள டெக்ஸ்ட்டானது டேபிளாக மாற்றப்படும்.

Paragraph என்பதை தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு Paragraph இடைவெளிக்கும் உள்ள டெக்ஸ்ட்டானது டேபிளாக மாற்றப்படும்.

Commas என்பதை தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு Comma இடைவெளிக்கும் உள்ள டெக்ஸ்ட்டானது டேபிளாக மாற்றப்படும்.

இவ்வாறு உங்களுடைய டெக்ஸ்ட்டை நீங்கள் Ms-word ஐப் பயன்படுத்தி எளிதாக டேபிளாக மாற்றம் செய்துகொள்ள முடியும்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"