பெண்ணின் மார்பைத் தடவ முயன்ற போலீஸ்காரர் கைது!


இங்கிலாந்தில், உதவி கோரி அழைத்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற போலீஸ்காரர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றார். உங்களது மார்பகம் ஒரிஜினலா இல்லை டூப்ளிகேட்டா என்று கேட்டு தடவிப் பார்க்கவும் முயன்றார். அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட போலீஸ்காரரின் பெயர் பாரஸ்டர். 41 வயதாகிறது. ஹேல்வுட் என்ற பகுதியைச் சேர்ந்தவர். 13 வருடமாக போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். தற்போது மெர்சிசைட் என்ற இடத்தில் பணியாற்றி வந்தார்.

2009ம் ஆண்டு ஜூலை மாதம் இவரது காவல் நிலையத்திற்கு ஒரு பெண்ணிடமிருந்து அழைப்பு வந்தது. தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட மோதலில் சண்டையாகி விட்டதாகவும், உதவ முன்வருமாறும் அப்பெண் கூறினார். இதையடுத்து பாரஸ்டர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அந்த வீட்டுக்குச் சென்ற பாரஸ்டர், வீட்டின் மேல் மாடியில் ஆய்வு நடத்தினார். அப்போது அந்தப் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியுள்ளார். உங்களது மார்பகம் உண்மையானதா, அல்லது டூப்ளிகேட்டா, அதை நான் தொடடுப் பார்க்கலாமா என்று கேட்டு அத்து மீற முயன்றுள்ளார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அப்பெண்.

அதன் பின்னர் அப்பெண்ணுக்கு அடிக்கடி போன் பேசி தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். ஒருமுறை மீண்டும் வீட்டுக்கே வந்து விட்டார் பாரஸ்டர். இதனால் கோபமடைந்த அப்பெண், வீட்டுக் கதவை அறைந்து மூடினார். அப்போது பாரஸ்டரின் கால் விரல் சிக்கி நசுங்கிப் போய் விட்டது. பின்னர் நாயை அவிழ்த்து விடுவேன் என்று அப்பெண் மிரட்டியதைத் தொடர்ந்தே அங்கிருந்து அகன்றுள்ளார் பாரஸ்டர்.

அப்படியும் விடாமல் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு, எனக்கு ஆபாசப் பட நடிகைகள் பலரைத் தெரியும். நீயும் அதில் சேர்ந்தால் பெரும் பணம் பார்க்கலாம் என்று பேசியுள்ளார். மேலும், போலீஸ் ஆவணங்களை திருட்டுத்தனமாக ஊடுறுவி அதில் இருந்த பல்வேறு பெண்கள் குறித்த ரகசியத் தகவல்களையும் சேகரித்துள்ளார்.

இவர் மீதான புகார்களைத் தொடர்ந்து பாரஸ்டர் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் நிறுத்தினர். அப்போது தன் மீதான புகார்களை பாரஸ்டர் மறுத்தார்.

விசாரணைக்குப் பின்னர் தற்போது பாரஸ்டருக்கு 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"