மனைவியைக் கொன்று பிரிட்ஜில் வைத்த மனிதர்


ஜப்பான் தலைநகர் டோக்கியோவைச் சேர்ந்த மசாய்சி யமடா (80). இவர் மீன் பதனிடும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவி திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து, உறவினர்கள் கேட்டதற்கு அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை என்று கூறி வந்தார். ஆனால், இது தொடர்பாக அந்தப் பெண்ணின் சகோதரர் போலீசில் புகார் தந்து பல ஆண்டுகளாய் தேடுதல் படலம் நடந்து வந்தது. இந் நிலையில் சமீபத்தில் இந்த வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டு எடுக்கப்பட்டது. போலீசார் யமடாவிடம் விசாரணை நடத்த மீன் பதனிடும் ஆலைக்கு வந்தனர்.

அவர்களுக்கு சந்தேகம் வரவே அங்கு மீன்களை பதப்படுத்தி வைக்கும் மிகப் பெரிய பிரிட்ஜைத் திறந்தனர். அதில் கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் ஐஸ்ஸாக மாறிக் கிடந்தார். யமடாவிடம் விசாரித்தபோது, மனைவியுடன் ஒருநாள் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் தான் அடித்ததில் மனைவி இறந்து விட்டதாகவும், இதையடுத்து உடலை காரில் வைத்து ஆலைக்குக் கொண்டு வந்து பிரிட்ஜில் போட்டு வைத்ததாகக் கூறியுள்ளார். இதில் கொடுமை என்னவென்றால் தனது மனைவியைக் கொன்ற ஆண்டு, தேதி கூட அவருக்கு நினைவில்லை.

இதனால் 10 ஆண்டுகளாக அந்த உடல் அங்கேயே இருந்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"