மனைவியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பிரிந்த கணவர்


அமெரிக்காவின் நாடியா சுலேமான் மீண்டும் ஒரு பரபரப்புச் செய்தியில் அடிபட்டுள்ளார். மூன்று மாதத்திற்கு முன்பு இவருக்கும், பாடபில்டர் ஒருவருக்கும் இடையே மலர்ந்த காதல் இப்போது முறிந்து போய் விட்டதாம். பாடி பில்டரால் நாடியாவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லையாம். இதனால்தான் காதலை முறித்துக் கொண்டாராம் நாடியா.

அமெரிக்காவின் நாடியாவுக்கு மொத்தம் 14 பிள்ளைகள். இதில் 8 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்று சாதனை படைத்தவர். அத்தனையும் டெஸ்ட் டியூப் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வயது 37தான் ஆகிறது. அடிக்கடி பரபரப்பான செய்திகளில் அடிபடும் நாடியா, சமீபத்தில் ஸ்டிரிப்டீஸ் நடனத்தை ஆடி அனைவரையும் அதிர வைத்தார். அவரது நிர்வாண உடலைத் தரிசிக்க பெரிய பெரிய புள்ளிகள் எல்லாம் ஆட்டத்தைக் காண வந்திருந்தனர்.

தற்போது கணவர் என்று யாரும் இல்லாமல் தனித்தே வாழ்ந்து வரும் நாடியா 3 மாதத்திற்கு முன்பு பாடிபில்டரான பிராங்கி என்பவரை காதலராக ஏற்றார். ஆனால் இந்தக் காதல் இப்போது முறிந்து போய் விட்டதாம். பிராங்கி வேண்டாம் என்று நாடியாதான் கூறி விட்டாராம்.

பிராங்கியை நாடியா காதலிப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து முதல் முறையாக அவர் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக கருதப்பட்டது. ஆனால் இதற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைத்து விட்டார் நாடியா.

நாடியாவின் வேகமான வாழ்க்கைக்கு ஈடு கொடுக்க முடியவில்லையாம் பாடி பில்டரால். இதனால்தான் பிராங்கியை நிராகரித்துள்ளார் நாடியா என்கிறார்கள்.

ஆனால் பாடி பில்டரால்தான் நாடியாவைப் பிரிந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லையாம். இருந்தாலும் நாடியா, உடல் ரீதியான உறவு வேண்டாம் என்று கூறி விட்டதால் தற்போது இருவரும் வெறும் நண்பர்களாக மட்டும் தொடர்கிறார்களாம்.

பல்வேறு பொருளாதார சிக்கல்கள், குழந்தைகளை வளர்ப்பதில் பணப் பிரச்சினை, வீடு ஏலத்திற்கு வருவது என சிக்கல்களில் சிக்கித் தவித்தாலும் கூட நிர்வாண நடனம், அழகுபடுத்திக் கொள்ளுதல் என்று ஆடம்பரமாகவே வாழ்ந்து வருகிறார் நாடியா என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"