பருவமானவர்கள் உடனடியாக பாலியல் உறவு கொள்வதில்லை ஏன் ?

மனிதக் குழந்தைகள் நிலையான குடும்பங்களில் தாய் தந்தையர் அரவணைப்பில் வாழ்கிறார்கள். பாலியல் உறவுகொள்ள பெண்ணிற்கும் பையனுக்கும் இடையே நெருக்கம் கூடுதலாக இருத்தல் வேண்டும்.

குழந்தை பிறக்குமுன்னும் பின்னும் பெண்தானே குழந்தையோடு கூடிய அளவு ஈடுபாடு கொண்டிருப்பதனால் பெண்கள் கூடிய நெருக்கமான உறவுகள் ஏற்படுவதை விரும்புகின்றனர்;. பையன்கள் பாலியல் உறவை வெறும் ஒரு சம்பவமாகவே கருதுகின்றனர்.

பெண்கள் ஏன் இதில் கூடுதலான தயக்கம் காட்டுகிறார்கள் என்பது ஆண்பிள்ளைகளுக்கு விளங்கவில்லை. (இதே ஆண்கள் தான் பெண்கள் உடன் சம்மதத்தைத் தெரிவித்தால் மிகவும் மலிவானவர்கள் என்றும் கருத்து வெளியிடுகிறார்கள்) இத்தகைய ஆண்களின் அணுகுமுறையைப் பெண்கள் எதிர்க்கிறார்கள. சும்மா பார்த்து ரசிப்போம் என்ற பாணியில் நடக்கிறார்கள். பொறுப்பெதுவும் கட்டுப்பாடு எதுவுமற்ற பாலியல் உறவை விரும்புகிறார்கள். திருமணம் செய்வது பற்றிச் சந்தேகம் கொள்ளுகிறார்கள். (திருமணம் முறிவில் முடிவுற்றுவிடுமோ என்று கருதுகிறார்கள்) சில பெண்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்து கணவன்மார்கள் இன்றியே வளர்த்தெடுக்கிறார்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"