சண்டை போட்டு ஜாக்கெட்டைக் கிழித்துக் கொண்ட வீராங்கனைகள்!


ஒலிம்பிக் வாட்டர் போலோ விளையாட்டின்போது அமெரிக்க வீராங்கனை ஒருவருக்கும், ஸ்பெயின் வீராங்கனை ஒருவருக்கும் தண்ணீருக்கடியில் கடும் சண்டை ஏற்பட்டது. இதில் ஸ்பெயின் வீராங்கனையின் மேலாடையை அமெரிக்க வீராங்கனைப் பிடித்து இழுத்ததில் அவரது மார்பு வெளியே தெரிந்தது. இதையடுத்து சுதாரித்த ஸ்பெயின் வீராங்கனை அமெரிக்க வீராங்கனையின் மார்பில் அடித்து விட்டார்.

ஒலிம்பிக் போட்டி ஒன்றில் இப்படி பெண்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

புதன்கிழமை இரவு அமெரிக்காவுக்கும், ஸ்பெயினுக்கும் இடையே வாட்டர் போலோ போட்டி நடந்தது. அதை என்பிசி தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பு செய்தது. அப்போது நீச்சல் குளத்தில் அன்டர் வாட்டர் கேமராவையும் அவர்கள் பொருத்தியிருந்தனர். அதில்தான் இந்த சண்டைக் காட்சி சிக்கியுள்ளது.

இந்தக் காட்சியை பார்வையாளர்கள் டிவியில் நேரடியாகப் பார்த்து அதிர்ந்து போயினர்.

இதுகுறித்து என்பிசி நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தப் போட்டியின்போது பல வீராங்கனைகள் ஒருவரது உடையை மற்றொருவர் கிழிக்கும் அளவுக்கு நடந்து கொண்டதைப் பார்க்க முடிந்தது. காட்சிகள் மோசமானதைத் தொடர்ந்து அன்டர்வாட்டர் கேமரா காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டோம். இருப்பினும் சில காட்சிகளை மக்கள் நேரடியாகப் பார்த்து விட்டனர்.

குறிப்பாக ஸ்பெயின், அமெரிக்க வீராங்கனைகள் இருவருக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் அமெரிக்க வீராங்கனை, ஸ்பெயின் வீராங்கனை ஒருவரது நெஞ்சில் குத்தி அவரது சட்டையைக் கிழித்தார். இதனால் அவரது மார்பு வெளியே தெரிந்தது. ஆனால் ஸ்பெயின் வீராங்கனை உடனே சுதாரித்து பதிலுக்கு அமெரிக்க வீராங்கனையின் சட்டையைப் பிடித்து இழுத்தார்.

அந்த அமெரிக்க வீராங்கனையின் பெயர் கெமி கிரேக் என்று தெரிய வந்துள்ளது என்றார் அந்த அதிகாரி.

இதற்கிடையே இந்தக் காட்சிகள் குறித்து டிவிட்டரில் செம கிண்டலாக கமென்டுடகள் உலா வர ஆரம்பித்துள்ளன. இது வாட்டர் போலோ விளையாட்டா இல்லை வேறு ஏதாவது என்று ஒருவர் கிண்டலடித்துள்ளார்.

கடும் சண்டைக்கிடையேஇடந்த இந்தப் போட்டி 9-9 என்ற கணக்கில் டை ஆகிப் போனது.

அடுத்து சீனாவுடன், அமெரிக்க வீராங்கனைகள் மோதவுள்ளனர். அப்போது எதை அவிழ்த்து களேபரப்படுத்தப் போகிறார்களோ….

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"