இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு ஆதரவாக 12,000 பேர் நிர்வாண போஸ்!


இளவரசர் ஹாரி நிர்வாணமாக பிகினி பெண்களுடன் இருப்பது போல வெளியான படங்களால் இங்கிலாந்து ராஜ குடும்பமே பெரும் அதிர்ச்சியில் மூழ்கி விட்டது.

லாஸ் வேகாஸுக்குப் விடுமுறையை கழிக்க போன இடத்தில் நிர்வாணமாக தோன்றி சுதந்திரமாக இருந்த இளவரசர் ஹாரியின் புகைப்படங்களை மீடியாக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இவரின் படங்களை வெறும் 15,000 டாலர்களுக்கு விற்றுள்ளனர் என்பதுதான் அதிர்சிக்குறிய விஷயம்.

இந்நிலையில் இளவரசர் ஹாரிக்கு ஆதரவாக ஒரு கும்பல் கிளம்பியுள்ளது. இவர்கள் இங்கிலாந்து ராணுவத்தை சேர்ந்த சிலர். இவர்கள் இளவரசர் ஹாரிக்கு ஆதரவாக, ‘Support Prince Harry with a naked salute! என்ற பெயரில் ஒரு பேஸ்புக் கணக்கை திறந்துள்ளனர். அதில், 12,000 பேர் நிர்வாண போஸ் கொடுத்து உலகையே அதிர்சிக்குள்ளாக்கியுள்ளனர்.

அனைவரும் இளவரசர் ஹாரிக்கு ராயல் சல்யூட் அடித்து நிர்வாணமாக போஸ் கொடுத்து ஆதரவு தெரிவிப்போம் என்ற அழைப்பு இடம் பெற்றது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் தங்களது நிர்வாண சல்யூட் படத்தை அனுப்பிக் குவித்து விட்டனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"