காதல் அடுத்து கல்யாயாணம் அடுத்து முதலிரவு. சாந்தி முகூர்த்தம் என்று அதற்கு சம்பிரதாயப் பெயர் வேறு.திருமணத்திற்குப் பின் வரும் முதலிரவு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பால் மயக்கங்களின் வெளிப் பாடாகவும் கலவியில் பேரின்பம் காணும் அற்புதப் பேறாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு மதமும் மதத் தன்மைகளை உள் வாங்கிக் கொண்ட சமூகமும் புனிதத் தன்மையையும் தெய்வீகத் தன்மையையும் கட்டிவிட்டுள்ளன.
முதலிரவுக் காட்சிகளை நமது திரைப்படங்கள் காட்டும் முறை அலாதியானது. மணப்பெண் கவிழ்ந்த முகத்தோடு தடம் பார்த்து பால் செம்புடன் வருவாள். அதற்காகவே காத்திருந்த ஆண் தனது ஆண்மையைக் காட்ட வெளிக்கிடுவான். பெண் தயங்குவாள், கண்கள் சந்திக்கும், இதழ்கள் உறிஞ்சத் துடிக்கும், பெண்ணின் ஆடை விலகும், அடுத்து விளக்கு அணைக்கப்படும்.
நாணுவதும் தயங்குவதும் சிணுங்குவதும் பெண்மை என்றும் இழுப்பதும் கட்டிப் பிடிப்பதும் முத்தமிடுவதும் ஆண்மை என்றும் எழுதப் படாத விதிகளுக்கு திரைப்படங்களும் தீனி போடுகின்றன. திரைப் படங்களைப் பார்த்து கற்பனையில் வாழும் நம்மவர்க்கோ முதலிரவில் இந்தக் காட்சி மனத் திரையில் ஒடத் துடங்கும். தங்களின் பல நாள் ஆசையை ஒரே நாளில் தீர்த்து விடுவார்கள்.
ஆனால் மருத்துவம் முதலிரவால் ஏற்படும் சில பக்க விளைவுகளை பட்டியலிடுகிறது. முதலிரவில் உடலுறவை தவிர்க்க வேண்டும் என்பதற்கு பல சுகாதாரக் காரணங்களை அது குறிப்பிடுகிறது. திருமணத்திற்கு முந்திய நாள்களில் பெண்ணும் மாப்பிள்ளையும் அது தொர்பான வேலைகளால் பல விதமான அலைச்சல்களுக்கு உள்ளாகிறார்கள்.
திருமணத்திற்கு முதல் நாள் இந்த அலைச்சல்களால் ஏற்பட்ட களைப்பும் அழுத்தமும் சற்று அதிகமாகவே காணப் படுகின்றன. அர்த்தமற்ற சடங்குகள் என்று எங்களைப் போன்றவர்கள் கூறினாலும் பெரியவர்களின் வற்புறுத்தல்களால் சடங்குகள் பெண்ணையும் மாப்பிள்ளையையும் வாட்டி வதைத்து விடுகின்றன.
கூடவே ஐயர் வளர்க்கும் புகையின் எரிச்சல் கழுத்திலிருந்து கால் வரைக்கும் உடுத்தியிருக்கும் மணத் தம்பதியினருக்கு ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் புகை வழியாக அசுத்தத் தூசிகளும் கிருமிகளும் உடலில் படிந்து விடுகின்றன.
மக்கள் நெருக்கத்தால் கிருமிகள் அதிகமாக ஒட்டிக் கொள்வதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் முதலிரவில் உடலுறவைத் தொடங்கும் தம்பதியினர் தாங்கள் அறியாமலே கேடுகளை உள்வாங்கிக் கொண்டு விடுகின்றனர். களைப்பின் மிகுதியால் அவர்களால் எதிர்பார்க்கும் இன்பத்தை அடைய முடியாமலும் போய்விடுகிறது.
காமத்தை வெறும் 10 நிமிட உடலுறவால் மட்டு தீர்த்து விடும் நோக்கம் முழுமையான இன்பத்தை கொடுக்காது.
முதலிரவு என்பது மறக்க முடியாத அனுபவம். வாழ்க்கையில் அது முதன்முறையாக மட்டும் இருக்கும்போது எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.
நீங்கள் ஒரு பெண்ணா? உங்களுக்கும் விரைவில் திருமணம் ஆகப்போகிறதா? முதலிரவை படபடப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?
உங்களுக்காக 20 யூஸ்புல் டிப்ஸ் :
1. முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதியஇடம் உங்களுக்குப் படபடப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்புகிற இடத்தை அவர் களிடம் தெரிவியுங்கள்.2. மனித உடலைப் பற்றிய, செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால் பெண் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம்.
3. முதலிரவு தினத்தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். நீங்களாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.
4. அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக மணமும், மசாலாவும்சேர்க் கப்பட்ட உணவுகளையும் தவிர்த்து விடவும்.
5. முடிந்தால் இன்னொரு முறை குளியுங்கள். குளிக்க நேரமில்லா விட்டாலும், பழைய மேக்கப்பை அகற்றி விட்டு, புதிதாக அதே சமயம் ரொம்பவும் மிதமாக மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள்.
6. உடலை உறுத்தாத உடையை அணிந்து கொள்ளுங்கள்.
7. நகைகள் குறைவாகவே இருக் கட்டும். கூரிய முனைகளைக் கொண்டதும், கனமானதுமான நகைகள் வேண்டாம்.
8. காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான சென்ட் தடவிக் கொள்ளுங்கள்.
9. உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தடவிக் கொள்ளுங்கள்.
10. கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தைத் தவிர்க்கவும்.
11. படுக்கை விரிப்பை இரு முறை சரி பார்க்கவும். அலங்காரம் செய்யப்பட்ட பூக்களிலிருந்து முட்களோ, பூச்சிகளோ உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.
12. முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரிடம்தெரிவியுங்கள்.
13. முதலிரவன்றே உறவில் ஈடுபட்டுத் தானாக வேண்டும் என்றுஅவசியமில்லை. நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
14. அடுத்தவர்களது அனாவசிய அனுபவங்களையும், அறிவுரைகளையும் கேட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரது அனுபவம் ஒவ்வொருமாதிரியாக இருக்கும்.
15. உணர்ச்சி வேகத்தில் உடனடியாக உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன் விளையாட்டுகளில் செலவழியுங்கள்.
16. முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி இருக்க லாம். அதைப் பற்றியே நினைப்பது வலியை இன்னும் அதிகமாக்கத்தான் செய்யும்.
17. வலியையும், வறட்சியையும் குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லதுதேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.
18. உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உங்களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்றமாகவும் அமையலாம். போகப் போக அது சரியாகி விடும்.
19. பெரும்பாலும் முதலிரவு திருமணம் ஆன அன்றே நடத்தப்பட்டு விடுகிறது. உங்களுக்கு அதில் இஷ்டம் இல்லையென்றால், தாராளமாக - பக்குவமாக அதை உங்கள் கணவரிடம் எடுத்துக்கூறுங்கள். நிச்சயம் அவர் ஓ.கே. சொல்லிவிடுவார்.
20. முதலிரவு மணமகன் வீட்டில் நடப்பதுதான் நல்லது. ஸ்டார் ஹோட்டல் என்றால் உஷாராக இருங்கள். அங்கே உங்களுக்கு தெரியாமல் கேமரா மின்னிக் கொண்டிருக்கலாம்.
