மாமியாரை பலாத்காரம் செய்த மருமகன்!


மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிகலை கிராமத்தில் தனிமையிலிருந்த வயோதிப மாமியாரை பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தலைமறைவாகியுள்ள மருமகனை தேடிவருவதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் குறித்த நபர் நேற்று மதுபோதையில் வீட்டிற்கு சென்ற வேளையில் அங்கிருந்த வயோதிப மாமியாரை பலவந்தமாக இழுத்துச் சென்று வல்லுறவிற்குட்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட வயோதிப பெண் மொனராகலை பொலிஸாருக்கு முறையிட்டதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய முனைந்த போது குறித்த நபர் தலைமறைவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் தலைமறைவாகியுள்ள நபரை தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் தற்போது மொனராகலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"