பள்ளி மாணவிகளை செக்ஸ் அடிமைகளாக வைத்திருந்த கடாபி

லிபியா நாட்டின் மறைந்த ஜனாதிபதி கடாபி, பள்ளி மாணவிகளை வருடக்கணக்கில் செக்ஸ் அடிமைகளாக வைத்திருந்ததாக பிரான்ஸ் நிருபர் ஒருவர் கூறியிருக்கிறார்.பிரான்ஸைச் சேர்ந்த அன்னிக் கோஜன் என்ற பத்திரிக்கை நிருபர் ஒரு நூல் எழுதியுள்ளார்.
அதில் தான் மும்மர் கடாபியின் இந்த கொடுங்கோல் புத்தியை பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு கடாபி, லிபியா நாட்டு பள்ளி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக விஜயம் செய்திருந்தார். அப்போது அப்பள்ளி மாணவி ஒருவர் இதுபோன்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்து சொரயா என்ற பெயருடைய அப்பெண் கூறுகையில், எனது பள்ளிக்கு கடாபி சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.அப்போது என்னை அவருக்கு பூங்கொத்து கொடுக்க தெரிவு செய்திருந்தனர். நான் பூங்கொத்தைக் கொடுத்தபோது அவர் எனது தலையில் ஆசிர்வதிப்பது போல கை வைத்தார்.

ஆனால் அதற்கு, கடாபி யார் தலை மீது கை வைக்கிறாரோ, அவர் தனக்கு வேண்டும் என்று சைகை செய்வதாக அர்த்தம். அடுத்த நாளே எனது தாயார் வைத்திருந்த சலூன் கடைக்கு யூனிபார்ம் போட்ட பெண்கள் சிலர் வந்தனர். அவர்கள் என்னை பல மணி நேரம் காரில் அழைத்துச் சென்றனர்.

பின்னர் பாலைவனப்பகுதகியில் அமைந்திருந்த ஒரு சிறிய கூடத்திற்குக் கூட்டிச் சென்றனர். உள்ளே போய்ப் பார்த்தால் கடாபி நிர்வாணமாக உட்கார்ந்திருந்தார்.இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போது கடாபி எனது கையைப் பிடித்து தனக்கு அருகில் உட்கார வைத்தார்.இனிமேல் நீ இங்குதான் இருக்கப் போகிறாய் என்று அவர் கூறியபோது எனக்கு இதயமே வெடித்துப் போய் விட்டது.

அதன் பின்னர் என்னை பலமுறை கடாபி பாலியல் பலாத்காரம் செய்தார். அடித்தார், உதைத்தார், என் மீது சிறுநீர் கழித்தார். கிட்டத்தட்ட 5 வருடங்கள் நான் நரகத்தில் இருந்தேன் என்றார்.அவர் மின்னஞ்சல் பார்க்க உட்காரும்போது தன்னைப் போல பல பெண்களை தன்னைச் சுற்றி வைத்துக் கொள்வார்.அவர்கள் ஓரல் செக்ஸில் ஈடுபடுவதுடன் என்னையும் கட்டாயப்படுத்தி ஈடுபட வைப்பார்கள்.

இது குறித்து ஹூடா என்ற பெண் கூறுகையில், என்னை 5 வருடம் செக்ஸ் அடிமையாக வைத்திருந்து சித்திரவதை செய்தார் கடாபி.அவரது பிடியில் சிக்கியிருந்த எனது சகோதரனை விடுவிப்பதற்காக அவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள நான் உடன்பட்டேன் என்றார்.

இன்னொரு பெண் கூறுகையில், என்னை முழுக்க நிர்வாணப்படுத்தி விட்டு, பிறகு மிகவும் மெல்லிதான பேண்டீஸை அணிந்து கொள்ளச் சொல்லி அதை ரசித்துப் பார்த்தார் கடாபி.மேலும் ஆபாசப் படங்களைப் போட்டுக் காட்டி தன்னுடன் அமர்ந்து பார்க்குமாறு கட்டாயப்படுத்தினார். அவருக்கு ஒரு நாளைக்கு பல பெண்கள் தேவைப்படும் என்றார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"