ஆபாச எஸ்.எம்.எஸ் களை அனுப்பி தற்கொலைக்கு தூண்டிய கணவன்


தர்மபுரியைச் சேர்நதவர் சண்முகம், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். சண்முகத்திற்கு ஒரு உணவு விடுதியும் உள்ளது.

இந்த உணவுவிடுதியில் சில வருடங்களுக்கு முன்பு நந்தினி என்ற 24 வயதுப் பெண் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கும், சண்முகத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதன் விளைவாக சண்முகம் நந்தினியை 2வது திருமணம் செய்து கொண்டு, அவரை ஓசூரில் குடி வைத்தார். இந்த நிலையில் கவிதாவின் வீட்டுக்கு நந்தினி விவகாரம் தெரிய வந்தது.

இதனால் கொதிப்படைந்த அவர்கள் நந்தினிக்கு தினசரி ஆபாச எஸ்.எம்.எஸ்களை அனுப்பியும், போனில் அழைத்து மிரட்டல் விடுப்பதுமாக இருந்துள்ளனர்.

இதனால் மன வேதனை அடைந்தார் நந்தினி. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் பலமுறை கொலை மிரட்டல் விடுத்து எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளனர்.

மேலும் நந்தினியை மிகவும் ஆபாசமாக விமர்சித்து 50 எஸ்.எம்.எஸ்.களையும் அனுப்பினார். இதனால் மனம் உடைந்த நந்தினி விஷம் குடித்தார்.ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"