அப்பனும் மவனும் சேர்ந்து பள்ளி மாணவியை மானபங்கப்படுத்த முயற்சி

அருப்புக்கோட்டை அருகே பள்ளி மாணவியை மானபங்கப்படுத்த முயன்ற தந்தை-மகனை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தும்மு சின்னம்பட்டியை சேர்ந்தவர் லீலா (வயது14) .

இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை லீலா வழக்கம்போல பள்ளிக்கு சென்றுவிட்டு காட்டுப் பாதை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முத்தையா (46), இவரது மகன் பாண்டி (20) ஆகிய 2 பேரும் லீலாவை வழிமறித்து வாயை பொத்தி முட்புத ருக்குள் தூக்கி சென்று மானபங்கப்படுத்த முயன்றனர்.

அப்போது லீலாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி யில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் விரைந்து வந்தனர். இதை பார்த்த தந்தையும், மகனும் லீலாவை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் குறித்து லீலாவின் பெற்றோர் எம்.ரெட்டியபட்டி போலீசில் புகார் செய்தனர்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முத்தையா மற்றும் அவரது மகன் பாண்டி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"