வேலைக்கார பையனுடன் உல்லாசமாக இருந்த மகள் கொலை


கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் பல் மருத்துவர்களான ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வாரின் மகள் ஆருஷியும், அவர்கள் வீட்டில் வேலை பார்த்த பையன் ஹேமராஜும் கொலை செய்யப்பட்டனர்.இவ்வழக்கில் ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர்.

இந்நிலையில் நீண்ட மாதங்களுக்கு பின்பு, அண்மையில் இவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவ்வழக்கு நடந்து வரும் காசியாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் ஆஜரான சட்டத்தரனி ஆர்.கே. சைனி கூறுகையில், சம்பவம் நடந்த அன்று மாலை வீட்டிற்கு தாமதமாக வந்த ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஹாலில் ஆருஷியும், ஹேமராஜும் இல்லாததையடுத்து ஆருஷியின் அறைக்கு சென்றனர்.

அவரது அறை உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததையடுத்து தாங்கள் வைத்திருந்த சாவியை வைத்து ஆருஷியின் அறையைத் திறந்தனர். அப்போது படுக்கையில் ஆருஷியும், ஹேமராஜும் இருப்பதைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர்.

உடனே ராஜேஷ் கோல்ப் ஸ்டிக்கை எடுத்து இருவரையும் அடித்ததில் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படும் பிளேடை வைத்து ஆருஷி மற்றும் ஹேமராஜின் கழுத்தை அறுத்துக் கொன்றனர். பின்னர் ஹேமராஜின் உடலை மொட்டை மாடியில் கொண்டு போய் போட்டுள்ளனர் என்றார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"