ஆணுறுப்பை பெரிதாக்குவதற்காக சிலிக்கன் ஊசிகளை ஏற்றிய பெண்


ஒருவரின் ஆணுறுப்பை பெரிதாக்குவதாக கூறி அந்நபருக்கு சிலிக்கன் ஊசிகளை ஏற்றி கொலை செய்தததாக அமெரிக்காவில் பெண்ணொருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அழகு நிலையத்தை நடத்தி வரும் கசியா ரிவேரா என்பவரே இத்தகைய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.இவர் ஜஸ்டீன் ஸ்டீர்ட் என்ற 22 வயது இளைஞருக்கு இவ்வாறு சிலிக்கன் ஊசிகளை ஏற்றியுள்ளார்.

சிலிக்கன் ஊசி ஏற்றப்பட்டதன் காரணமாக மேற்படி இளைஞனின் நுரையீரலில் குருதிக் கட்டியொன்று ஏற்பட்டு அவ்விளைஞன் அடுத்தநாள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை மற்றும் அங்கீகரிக்கப்படாத மருத்துவத் தொழில் புரிந்தமை போன்ற குற்றங்களுக்காக ரிவேரா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ரிவேராவுக்கு எதிராக வேறு எவரும் சாட்சியமளிக்க முன்வராத நிலையில் ரிவேரா 75,000 அமெரிக்க டாலர்களில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"