நிர்வாணமாக நீந்தும் உலக சாதனை முயற்சி தோல்வி


நூற்றுக்கணக்கானோர் இணைந்து நிர்வாண கோலத்தில் நீந்துவதன் மூலம் புதிய உலக சாதனை படைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

பிரிட்டனின் நோர்த்தம்லன்ட் கடலில் இச்சாதனை நிலைநாட்டப்படவிருந்தது.மிகவும் குளிரான காலநிலையில் 200 க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் நிர்வாணமாக நீந்தினர்.

மனநல தொண்டு நிறுவனமொன்றுக்கு நிதி திரட்டுவதற்காக இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனினும், புதிய உலக சாதனை முயற்சி தோல்வியுற்றுள்ளது.

புதிய சாதனைக்கு தேவையான எண்ணிக்கையோனோர் இந்நிகழ்வில் பங்குபற்றாமையே இதற்கான காரணமாகும். பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் 400 இற்கும் அதிகமானோர் நிர்வாணமாக நீச்சலில் ஈடுபட்டமையே தற்போது உலக சாதனையாக உள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"