"பாலியல் மற்றும் கருத்தடை ஆய்வு" ஆச்சரியமூட்டும் உண்மைகள்


தற்போது அனைத்து இளம் மக்களும் பாலியல் தொடர்பில் ஈடுபடுவது அதிகமாகியுள்ளது. அவ்வாறு ஈடுபடும் போது அவர்களுள் சிலர் பாதுகாப்புடனும், பாதுகாப்பற்றும் ஈடுபடுகின்றனர். அதற்காக இளம் மக்களிடம் பாலியல் மற்றும் கருத்தடையின் மீது உள்ள மனோபாவம் குறித்து மேற்கொண்ட ஆய்வு முடிவை வெளியிட, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26-ம் தேதி ‘உலக கருத்தடை நாள்’ (WCD) என்று அறிவித்து, அந்த நாளில் வெளியிட்டது. அதிலும் முதலில் இந்த ‘உலக கருத்தடை நாள்’ என்று பேயர் ஹெல்த் கேரின் (Bayer health care) மூலம் உலக அளவில் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முயற்சிக்கு இந்தியாவில் உள்ள குடும்ப திட்டமிடுதல் சங்கங்கள் (FPAI) மற்றும் மகப்பேறு கூட்டமைப்பு மற்றும் இந்திய பிரசவ சங்கங்கள் (FOGSI) ஆதரிக்கின்றன.

இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வின் முடிவு :
* குறைந்தது மூன்று நாடுகளில் உள்ள 36% பெண்கள், தனது 24-29 வயதுகளில் தான் முதல் உடலுறவு கொள்கின்றனர் என்று கூறுகிறது.

* ஒட்டுமொத்தவர்களில், இரு பான்மயரும் முதல் உடலுறவு கொள்ளும் போது 55% பேர் ஆண் ஆணுறையைப் பயன்படுத்துகின்றனர் என்று தெரிய வந்தது.

* கருத்தடை பயன்பாட்டில் 29% ஆண்கள் மற்றும் பெண்கள் குறைந்தது ஒரு முறையேனும் பாதுகாப்பற்ற உடலுறவை மேற்கொள்கின்றனர்.

* கர்ப்பத்தடைக்கு பெண்கள் பயன்பாடு : 42% பெண்கள் கர்ப்பத்தடைக்கு தினமும் ஒரு மாத்திரையை எடுத்து கொள்கின்றனர். மற்றொரு 28% பெண்கள் உள்-கருப்பை சாதனம் (IUD) பயன்படுத்துகின்றனர். மேலும் குறைந்தது 3 நாடுகளில் இந்த கர்ப்பத்தடை முறை பயன்படுத்தபடுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

* கருத்தடை பொறுப்பைப் பற்றி பதிலளித்தவர்களில் வெறும் 52% ஆண்கள் மற்றும் பெண்கள் இருபான்மயரும் இந்த கருத்தடைக்கு பொறுப்பு என்று ஒப்புக்கொண்டனர்.

* அதுமட்டுமல்லாமல் கருத்தடை முறைகள் பயன்பாட்டைப் பற்றி பதிலளித்தவர்களில் 51% மக்கள் தற்போது கருத்தடைக்கு ஆண் ஆணுறையை ஒரு வடிவமாக பயன்படுத்துகின்றனர் என்றும் கூறப்படுவதாக கூறுகின்றனர்.

தற்போது மேற்கொண்ட உலக கருத்தடை நாள் 2012 கணக்கெடுப்பின் புதிய தகவலாக, மீண்டும் 36% இந்திய பெண்கள், அவர்களது 24-29 வயது வரம்பில் முதல் உடலுறவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு பெண்ணின் முதல் உடலுறவு கொண்ட வயது 24-29 என்றும், அவரது முதல் கர்ப்பம் 24-27 வயதிற்கும் இடையே ஏற்பட்டது என்று 48% இந்திய பெண்கள் பதிலளித்ததில் தெரிய வந்துள்ளது.

மேலும் குடும்ப கட்டுப்பாடு மற்றும் கருத்தடை பயன்பாடு விகிதங்கள் மிக முக்கியம் என்பதையும் அந்த கணக்கெடுப்புகள் குறிப்பிடுகின்றன. அதிலும் இந்தியாவில் இந்த கருத்தடை பயன்பாட்டு முறை விகிதம் மிகவும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கின்றன.

முதல் முறையாக நீண்ட காலமாக குடும்ப கட்டுப்பாடு பற்றி நடத்திய ஆய்வில், ஆண் ஆணுறை மட்டுமே பெரும்பாலானோரால் உபயோகப்படுத்தபடுகிறது என்பது தெரிய வந்தது. மேலும் மூன்றில் ஒருவர் கருத்தடை தேவை இல்லை என்றனர்.

குடும்ப திட்டமிடுதல் சங்கங்கள் (FPAI) மற்றும் மகப்பேறு கூட்டமைப்பு மற்றும் இந்திய பிரசவ சங்கங்கள் (FOGSI) இணைந்து, இந்தியாவில் பேயர் ஜ்ய்டுஸ் பார்மா (Bayer Zydus Pharma) கருத்தடை பற்றிய விழிப்புணர்வை மேற்கொள்ள உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு பெண்ணும் உலக கருத்தடை தினமான இன்று முதல் தங்கள் எதிர்காலத்தில், திட்டமிட்டு கர்ப்பம் தெறிப்பது என்றாலும் கருத்தடையை பயன்படுத்துவதாக இருந்தாலும், உங்கள் துணைவருடனும், உங்கள் மருத்துவரிடம் கலந்துரையாடி பின்னர் முடிவு எடுக்க வேண்டும் என்று Angel-Michael Evangelista, Managing Director, Bayer Zydus Pharma நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"