MS Excel-லில் if நிபந்தனையைப் பயன்படுத்தி கணக்கீடுகள் செய்வது எப்படி?



IF நிபந்தனையின் அமைப்பு : (Syntax of If condition)

=if(condition, value if true, value if false)

இதில் Condition என்பதில் நமக்குத் தேவையான நிபந்தனையைக் கொடுக்கலாம்.அடுத்து நமது நிபந்தனை சரியாக இருந்தால் என்ன மதிப்பு வரவேண்டும் என்பதையும் தவறாக இருந்தால் என்ன மதிப்பு வரவேண்டும் என்பதையும் கொடுக்க வேண்டும்.மூன்று பகுதிகளுக்கு மிடையில் ஒரு காற்புள்ளி வரவேண்டும்.நாம் கொடுத்த நிபந்தனை சரியாக இருந்தால் சரியான மதிப்பும் தவறாக இருந்தால் தவறான மதிப்பும் விடையாக வரும்.

1.ஒரு சிறிய உதாரணம் பார்ப்போம்.வயது 18 க்கு மேலிருந்தால் வாக்களிக்கத் தகுதியானவர் என்றும் இல்லையெனில் வாக்களிக்கத் தகுதியில்லை எனக்கொள்வோம்.
=if(age>18,"Eligible to vote","No eligible")
எக்சலில் பயன்படுத்தும் முறை : =if(A1>18,"Eligible to vote", "No eligible")

2.இதைப்போல நகை அடகுக்கடையொன்றின் வட்டி பிடிக்கும் விதம் பார்ப்போம்.ருபாய் 5000 க்கு மேலிருந்தால் வட்டி விகிதம் இரண்டு எனவும் ருபாய் 5000 க்கு கீழே இருந்தால் வட்டி விகிதம் 2.5 எனவும் உள்ளது.இதை எப்படி if நிபந்தனையில் அமைப்பது?

=if(amount>5000, amount*2, amount*2.5)
எக்சலில் பயன்படுத்தும் முறை: =if(A1>5000,A1*2,A1*2.5)

3.அலுவலகத்தில் பணியாளர்கள் ஒரு மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் வந்திருந்தால் அவருக்கு கூடுதலாக ஒரு நாள் Earned leave ஆக தரப்படும்.இதைக்கணக்கிட அவரின் வந்த நாட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

=if(Presentdays>20,
Earnedleave=1,Earnedleave=0)
எக்சலில் பயன்படுத்தும் முறை: = if(A1>20,1,0)

4.if நிபந்தனைக்குள்ளும் நாம் பங்சன்களைப் (Using functions in If condition) பயன்படுத்தலாம்.உதாரணமாக A1 என்ற செல்லில் சொற்கள் TN என்று ஆரம்பித்து வந்தால் Tamilnadu என்று நமக்கு வரவேண்டும்.

TN 57 E 9999
=IF(LEFT(A1)="TN","Tamilnadu")
இப்போது இதில் Left என்ற பங்சன் If நிபந்தனைக்குள் பயன்படுத்தியிருக்கிறோம். இதுபோல் தேவைப்பட்டால் பங்சன்களையும் பயன்படுத்தலாம்.மேலும் இதில் நிபந்தனை தவறாகும் பட்சத்தில் வர வேண்டிய மதிப்பைக் கொடுக்கவில்லை.எனவே "TN" என்று ஆரம்பிக்காவிட்டால் விடை False என்று வரும்.
(எ.கா) AP 45 Q 7777
Answer : False

5.ஒரு வசூல் செய்யும் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒரு மாதத்தில் வசூல் செய்த தொகைக்கு ஏற்ப அவர்களின் கமிசன் தொகை (Salary incentive) எவ்வாறு கணக்கிடப்படுகிறது எனப்பார்ப்போம்.ருபாய் 8000 க்கு மேல் வசூல் செய்திருப்பார்கள் எனில் அவர்களுக்கு 5 சதவீதம் கமிசன் கொடுக்கலாம் என்று கொள்வோம்.குறைவான தொகையெனில் அவர்களுக்கு No bonus என்று வரவேண்டும்.

How to use IF conditions in Microsoft Excel

A1 என்ற நெடுவரிசையில் ஊழியர்களின் பெயர்,A2 வில் அவர்கள் வசூல் செய்த தொகை இருப்பின் A3 வில் அவர்களின் கமிசன் வரவேண்டும்.
இதற்கான சூத்திரம் : =if(A2> 8000, A2*0.05,"No bonus")

How to use IF conditions in Microsoft Excel

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"