ஆபாச படத்திற்காக சிறுமிகளுக்கு பேஸ்புக் மூலம் வலை


பேஸ் புக் போன்ற சமூக இணையதளங்களில் சிக்கும் சிறுமிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து படம் பிடிப்பதும், விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சம்பவங்களும் இந்தோனேஷியாவில் அதிகரித்து வருகிறது.

பேஸ் புக், டுவி்ட்டர் போன்ற சமூக இணையதளங்கள் தற்போது இளம் தலைமுறையினர் இடையே வேகமாக பரவி வருகிறது. உலகில் எங்கோ இருக்கும் நபருடன் நட்பு கொள்ள உதவும் சமூக இணையதளங்கள், பல நன்மைகளை ஏற்பட்டாலும், சில தீமைகளும் ஏற்பட தான் செய்கிறது.

இந்தோனேஷியா நாட்டில் சமீபகாலமாக காணாமல் போன இளம்வயதினர் குறித்து அந்நாட்டு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காணாமல் போன 129 குழந்தைகளில் 27 பேருக்கு பேஸ்புக் பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. பேஸ்புக்கில் அறிமுகமாகும் நபர்களின் அழைப்பை ஏற்கும் இவர்கள், கடத்தப்படுவது தெரிய வந்துள்ளது.

இதிலும் இளம் சிறுமியர் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் ஆண்டுதோறும் இந்தோனேஷியாவில் 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் சிறுமியர் பாலியல் தொழில் மற்றும் ஆபாச படம் எடுக்கும் நபர்களிடம் சிக்கி கொள்வது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் ஏஜென்ட்களிடம் இருந்து தப்பிய 14 வயது சிறுமி ஒருவர் மூலம் இது வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. பேஸ்புக் இணையதளத்திற்கு அடிமையான இந்த சிறுமிக்கு, மர்மநபர் ஒருவர் அறிமுகமாகி உள்ளார்.துவக்கத்தில் நட்பு அடிப்படையில் பழகி வந்த அவர், சிறுமியை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

அவரது அழைப்பை ஏற்று நேரில் சந்திக்க சென்ற சிறுமி, அழகான வாலிபர் ஒருவரை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.அதேபோல 2வது முறை இருவரும் சந்திக்க திட்டமிடப்பட்டது. அப்போது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வேஸ்ட் ஜாவா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஒரு அறையில் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த 4 சிறுமிகளுடன், இவரும் அடைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

ஒரு வாரத்திற்கு மேலாக பல கொடுமைகளை அனுபவித்த சிறுமி, பத்தம் என்ற பகுதியில் உள்ள விபச்சார கும்பலுக்கு தான் விற்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். எப்படியே அங்கிருந்த தப்பிய சிறுமி, போலீசாரிடம் தனது நிலையை எடுத்து கூறினார்.
இதேபோல ஆண்டுதோறும் எண்ணற்ற சிறுமிகள், பேஸ்புக் போன்ற சமூக இணையதளத்தின் மூலம் கவரப்பட்டு இந்தோனேஷியாவில் கடத்தப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"