செக்ஸ் டார்ச்சரால் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை


பேராசிரியர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி பருத்திப்பட்டு அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் பத்மபிரியா (24). பிசிஏ பட்டதாரி. இவருக்கும் திருச்சி உத்தமர்கோயில் மங்களம் அப்பார்மென்ட்டில் வசிக்கும் கிஷோர்குமார் என்பவருக்கும் இரண்டரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக கிஷோர்குமார் உள்ளார்.

திருச்சியில் பெற்றோர், மனைவியுடன் கூட்டு குடும்பமாக கிஷோர்குமார் வசிக்கிறார். இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு பத்மபிரியாவை அழைத்துக் கொண்டு அவரது மாமியார் கலா, ஆவடிக்கு வந்தார். அங்கு அவரது பெற்றோரிடம், ‘பத்மபிரியாவுக்கு உடல் நலம் சரியில்லை, அதனால்தான் அழைத்து வந்தேன் என கூறி அவரை விட்டு சென்றார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பத்மபிரியா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்ததும் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறினர்.

சம்பவம் குறித்து அவரது தந்தை சீனிவாசன், ஆவடி போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் மனோகரன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், கிஷோர்குமார், பத்மபிரியாவை செக்ஸ் டார்ச்சர் செய்ததால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

பத்மபிரியா எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், ‘அப்பா, அம்மா, தம்பி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எனது சாவுக்கு காரணம் கணவர்தான். அவர், மோசமான குணம் கொண்டவர். என்னை செக்ஸ் டார்ச்சர் செய்தார். தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனமானதுதான். மன்னித்து கொள்ளுங்கள்Õ என கூறியிருந்தார். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"