14 வயதில் குழந்தை பெற்ற சிறுமி…அதை கழுத்தை நெறித்து கொன்ற கொடூரம்..!


"என்னுடைய குழந்தையை என் கையால் கழுத்தை நெறித்துக் கொன்றேன். அது மெதுவாக மூச்சை விட்டது. அதன் உடலை என்னுடைய ஷூ பாக்ஸ்க்குள் அடைத்து டிஸ்போஸ் செய்தேன்..."

நெஞ்சை பதறவைக்கும் இப்படி ஒரு வாக்குமூலத்தை சொன்னது வேறு யாருமல்ல. 14 வயதான சிறுமி.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் கிரீன்பிரியர் கிராமத்தைச் சேர்ந்த கேசிடி குட்சன் என்ற சிறுமி செப்டம்பர் 19ம் தேதி இந்த பாதகச் செயலை செய்துள்ளார். அந்த சிறுமிக்கு பிரசவ வலி வந்த உடன் உடனடியாக டாய்லெட்டிற்குள் சென்று வாயில் டவலை கட்டிக்கொண்டு சத்தம் கேட்காமல் ஆண் குழந்தையை பெற்றுள்ளார். பின்னர் குழந்தையின் தொப்புள் கொடியை கட் செய்து எடுத்திருக்கிறாள்.

பின்னர் குழந்தையை கழுத்தை நெறித்துக் கொன்று ஷூ பாக்சில் அடைத்து வீட்டில் இருந்த அழுக்குத்துணி டப்பாவில் அடைத்துவைத்து கமுக்கமாக இருந்துவிட்டாள் அந்த சிறுமி.

மூன்று நாட்களுக்குப் பின்னர் அவளுடைய தாயார் தெரசா குட்சன் தன்னுடைய மகளின் அறையை சுத்தம் செய்த போது அழுக்குத்துணிக்குள் ஈரமான உடைகள் இருந்ததை பார்த்து சந்தேகத்துடன் எடுத்து பார்த்தாள். அதில் இறந்த சிசு இருக்கவே அதிர்ச்சியடைந்து மகளிடம் விசாரணை செய்தாள்.

தான் கர்ப்பமாக இருந்ததையும் தனக்கு குழந்தை பிறந்தததையும் ஒப்புக்கொண்ட குட்சன் அதை கொலை செய்து மறைத்தது உண்மைதான் என்று தாயாரிடம் ஒப்புக்கொண்டாள்.

மகளின் செயலால் அதிர்ச்சி அடைந்த தாயார் உடனடியாக தன்னுடைய சகோதரியை அழைத்து போலீசிற்கு தகவல் கூறுமாறு தெரிவித்தார்.

இதனையடுத்து அவளை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போக் கவுன்டி செரிப் அலுவலகத்தில் இது தொடர்பாக விசாரனை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது சான்டாகிளாஸ் பொம்மையைக் கொண்டு அந்த குழந்தையை தான் எவ்வாறு கழுத்தை நெறித்து கொலை செய்தேன் என்பதை அந்த சிறுமி போலீசாரிடம் செய்து காட்டினாள்.

கர்ப்பமாக இருந்ததை மறைக்க லூசான சட்டை, பேண்ட் போட்டுக் கொண்டு இருந்துள்ளார் அந்த சிறுமி. இதனை அறியாமல் தன்னுடைய மகள் குண்டாகிக் கொண்டே வருவதாக கூறி அவளை உடற்பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் பெற்றோர்களுக்குத் தெரியாமல் குழந்தை பெற்று அதனை கொலை செய்துள்ளார் அந்த சிறுமி.

விசாரணைக்குப் பின்னர் இது திட்டமிட்ட கொலை என்று போலீசார் தெரிவித்தனர். தன்னுடைய 18 ஆண்டுகால காவல்துறை வாழ்க்கையில் இது மிகவும் குழப்பகரமான, இதயத்தை தாக்கிய மிகமோசமான வழக்கு என்று போக் கவுண்டியின் தகவல் பொதுமக்கள் தகவல்துறை அதிகாரி ஒருவர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"