ஜார்ஜ் க்ரியர்சன், 20ம் நூற்றாண்டு தொடக்கத்தில், லிங்விஸ்டிக் சர்வே ஆஃப் இந்தியாவை தொடங்கி, இந்தியாவின் பல மொழிகளை கேட்டு ஆராய்ச்சி செய்தார். 1913 முதல் 1929 வரை, 97 இந்திய மொழிகளையும், வட்டார வழக்குகளையும் கிராம்ஃபோனில் பதிவு செய்தார். அந்த 250 ரிகார்டிங்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
அப்போதைய பிரித்தானிய காலனீய அரசாங்கம், இந்த பதிவுகளையும், அதனுடன் தயாரிக்கப்பட்ட 19 வால்யூம் புத்தகங்களையும் வைத்து, அரசாங்க அதிகாரிகளுக்கு அவர்கள் வேலைக்கு அனுப்பட்ட ஊரில் புழங்கும் மொழியை கற்றுத்தர திட்டமிட்டது.
அப்போது தயாரிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட குரல்களின் ஆடியோ தொகுப்பினை இந்த தளத்தினால் காணலாம்..
வரலாற்று பதிவுகளை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இந்த தளம் பெரும் உதவியாக இருக்கும்..
தள முகவரிகள்
http://dsal.uchicago.edu/lsi/
http://www.bbc.co.uk/news/world-south-asia-11677932