டி.வி நடிகைகள் உடை மாற்றுவதை செல்போனில் படம்பிடித்ததால் பரபரப்பு


சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் டி.வி. தொடர் படப்பிடிப்பின்போது சின்னத்திரை நடிகைகள் உடைமாற்றுவதை செல்போனில் ஒரு மர்ம நபர் வீடியோ படம் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

குரோம்பேட்டை துர்கா நகரில் உள்ள கோவில் ஒன்றில் ஒரு டிவி தொடரின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது சின்னத் திரை நடிகைகள் உடை மாற்றுவதற்கு கோவில் அருகில் அறை ஒன்று ஒதுக்கப்பட்டது. அந்த அறைக்கு உடைமாற்ற சென்ற நடிகைகள் அந்த அறையில் செல்போன் ஒன்று இருந்ததையும், அதில் வீடியோ ஆனில் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதில் உடைமாற்றும் காட்சிகளும் பதிவாகியிருந்தன.

இதையடுத்து செல்போனில் பதிவாகியிருந்த காட்சிகளை நடிகைகள் அழித்துவிட்டனர். இந்த காட்சிகளால் அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வெளியில் இந்தக் காட்சிகள் பரவினால் பெருத்த அவமானம் ஏற்படுமே என்றும் அழுதனர். நடிக்கவும் மறுத்து விட்டனர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

செல்போனை டிரஸ்ஸிங் ரூமில் வைத்த நபர் தப்பி விட்டார். இதுகுறித்து போலீஸில் புகார் எதுவும் தரப்படவில்லை. ஆனால் துர்காநகர் முழுவதும் இந்த விவகாரம் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"