கணினியில் தேவையில்லாத புரோகிராம்களை நீக்கும் இலவச மென்பொருள்



இந்த புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை நீக்கும்போது, அழிக்காமல் விடப்படும் பைல்களைக் கண்டறிந்து முழுமையாக அழிக்கிறது.தானாகவே தேவையற்ற பைல் எண்ட்ரிகளின் இடமறிந்து காட்டுகிறது.

இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை, அவற்றிற்கான ஐகான்களுடன் தெரிவிக்கிறது. இதன் மூலம் நாம் நீக்கப்பட வேண்டிய புரோகிராம்களை எளிதாகத் தேர்ந்தெடுக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் வகையில் அவற்றின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின் நீக்குவதற்கான கட்டளை கொடுத்தால், மொத்தமாக, அவற்றின் சுவடே இல்லாமல் நீக்குகிறது.

பொதுவாக ஆட்/ரிமூவ் புரோகிராம் செயல்பட சற்று நேரம், பிடிக்கும். அப்ஸல்யூட் அன் இன்ஸ்டாலர் மிக வேகமாகச் செயல்படத் தொடங்குகிறது. அத்துடன் இதன் இன்டர்பேஸ் மிக எளிதாக இதனை இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"