விக்கிபீடியாவிலிருந்து மென்புத்தகம் தயாரிப்பது எப்படி?


தகவல் களஞ்சியமான விக்கிபீடியா (Wikipedia) ஆங்கிலத்தில் மட்டும் மூன்று கோடி தகவல் பக்கங்களை கொண்டுள்ளது.அதிலிருந்து நமக்கு வேண்டிய தகவல் பக்கங்களை தொகுத்து மென்புத்தகமாக PDF வடிவில் தரவிறக்கிக் கொண்டால் இணையதொடர்பு இல்லாமல் படித்து கொள்ளலாம்.அச்சடித்து கொள்ளலாம்.

முதலில் விக்கிபீடியாவில் ஒரு பயனர் கணக்கை உருவாக்க வேண்டும்.பின் உள்நுழைந்து நமக்கு வேண்டிய பக்கத்தை தேடி,இடது பக்கத்தில் உள்ள Create Book என்னும் பகுதியில் "Add Wiki Page" ஐ சொடுக்கி நாம் தேடிய பக்கத்தை சேமிக்கலாம்.இது போல் நமக்கு தேவையான பக்கங்களை மேலும் சேர்த்துக்கொள்ளலாம்.

பின்னர்,"Show Book" ஐ சொடுக்கி நாம் சேர்த்த பக்கங்களுக்கு உரிய தலைப்பை கொடுத்து PDF வடிவில் தரவிறக்கிக் கொள்ளலாம்.

PDF வடிவில் மாற்றும் போது விக்கிபீடியாவே பக்கங்களை,படங்களை தகுந்த முறையில் நேர்படுத்தி தருகிறது.

இணைய தளம் செல்ல கீழே சொடுக்குங்க..

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"