இலவச சயின்டிபிக் கால்குலேட்டர் மென்பொருள்

மாணவர்களுக்கு கால்குலேட்டர், குறிப்பாக சயின்டிபிக் கால்குலேட்டர் ஒரு முக்கியத் தேவையாக அமைந்துள்ளது. ஆனாலும் அவற்றிலும் சில எல்லைகள் உள்ளன. நாம் விரும்பும் அனைத்து சமன்பாடுகளையும் அதில் மேற்கொள்ள முடியாது. அல்லது பல மாணவர்கள் இது குறித்துத் தெரியாமல் உள்ளனர். இந்தக் குறையைத் தீர்க்க, இணையத்தில் ஸ்பீட் க்ரஞ்ச் ( Speedcrunch ) என்ற பெயரில் ஒரு சயின்டிபிக் கால்குலேட்டர் புரோகிராம் கிடைக்கிறது.

இந்த புரோகிராமின் பைல் அளவு 2.5 எம்.பி. இறக்கி, கம்ப்யூட்டரில் பதிந்திடலாம். இதன் சிறப்பம்சம், இதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என, மிகத் தெளிவாக ஹெல்ப் மெனுவில் தந்திருப்பதாகும். இதனால் ஒரு சயின் டிபிக் கால்குலேட்டரில் நாம் எதிர்கொள்ளும் தடுமாற்றங்கள் இதனைப் பயன்படுத்துகையில் இருக்காது. பயன்பாடும் அதனைக் காட்டிலும் கூடுதலாகவே கிடைக்கிறது. எனவே அறிவியல் பயிலும் அனைத்து மாணவர்களும் இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"