குடும்ப கட்டுப்பாடு செய்தால் உடல் குண்டாவது ஏன்?


குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்களில் பெரும்பாலோனோர் குண்டாகிவிடுகின்றனர். இதற்கு பெண்கள் மனரீதியாக பாதிப்பிற்குள்ளாவதும், மருந்து மாத்திரைகளும்தான் காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

த‌ற்போது உ‌ட‌ல் எடை உய‌ர்வு ஒரு ‌மிக‌ப்பெ‌ரிய ‌பிர‌ச்‌சினையாக உருவெடு‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், ‌வீ‌ட்டு வேலைகளை செ‌ய்ய இ‌‌ய‌ந்‌திர‌ங்க‌ள் வ‌ந்தது‌ம், உணவு‌‌ப் பழ‌க்கமு‌ம் காரண‌ங்களாக இரு‌ந்தாலு‌ம், குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சையு‌ம் மு‌க்‌கிய‌க் காரண‌ம் எ‌ன்‌கின்றனர் மரு‌‌த்துவ‌ர்கள்

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ள்வ‌தி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் பெ‌ண்களு‌க்கு‌த்தா‌ன் முத‌லிட‌ம். 100‌க்கு 1 எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் கூட ஆ‌ண்க‌ள் குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌‌சி‌கி‌ச்சை செ‌‌ய்து கொ‌ள்ள மு‌ன்வருவ‌‌தி‌ல்லை. இது ஒருபுற‌மிரு‌க்க, குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட பெ‌ண்களு‌க்கு உட‌ல் எடை அ‌திக‌ரி‌க்க அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் இரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு பெ‌‌ண்க‌ளி‌ன் உட‌லி‌ல் ப‌ல்வேறு மா‌ற்ற‌ங்க‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன. சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்படுகிறது. அடைப்பு காரணமாக இந்த ஹார்மோன் சரியாக சுரக்காது. இதுதான் உடலில் அதிக கொழுப்பு சேராமல் தடுக்கின்ற ஹார்மோன். மருத்துவர்கள் இதை புரொடக்டிவ் ஹார்மோன்' என்று அழைக்கிறார்கள். குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌ காரணமாக இந்த ஹார்மோன் சுரப்பு தடைபட்டு, அதிகப்படியான கலோரிகள் தேங்கி, கொழுப்புச்சத்து சேர்ந்து உடல் குண்டாகி விடுகிறது. பெரும்பாலான பெண்கள் லேசான மனஅழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்.

குடு‌ம்ப‌ப் பெ‌ண்க‌ள் பலரு‌ம், குழ‌ந்தையு‌ம், கணவரு‌ம் ‌மீத‌ம் வை‌த்த உணவையு‌ம், வீணாகி விடுமே என்று அதிகமான உணவுகளை உண்பது‌ம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது‌ம், ‌வீ‌ட்டு வேலைகளை செ‌ய்ய இய‌ந்‌திர‌ங்க‌ள் இரு‌ப்பது‌ம், டிவி பார்த்துக் கொண்டு நொறு‌க்கு‌த் ‌தீ‌னி சா‌ப்‌பிடுவது‌ம், ம‌திய நேர‌த்‌தி‌ல் கு‌ட்டி‌த் தூ‌க்க‌ம் எ‌ன்று சொ‌ல்‌லி 2 அ‌ல்லது 3 ம‌ணி நேர‌ங்க‌ள் தூ‌ங்குவது‌ம் உடல் பருமன் ஏற்படுவதற்கானக் காரணிகளாகப் பட்டியலிடுகின்றனர் மருத்துவர்கள்.

நா‌ம் சா‌ப்‌‌பிடு‌ம் கொழு‌ப்பை‌ உட‌லி‌ல் சேராம‌ல் தடு‌ப்பது ஈ‌ஸ்‌ட்ரோஜ‌‌ன் ஹா‌ர்‌மோ‌ன். குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு இந்த ஹார்மோன் ச‌ரியாக சுர‌க்காம‌ல் போவதை‌க் கவன‌த்‌தி‌ல் கொ‌ண்டு, அத‌ற்கு மு‌ன்பு சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்த அ‌திக‌ப்படியான கொழு‌ப்பு உணவுகளை த‌வி‌ர்‌ப்பது உட‌ல் எடையை பராம‌ரி‌க்க உதவு‌ம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

எனவே, குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌ செய்து கொண்ட பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும். கலோரிகள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் குறைவான அளவு எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்துகள் நிறைந்த உணவுப்பொருட்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

காய்கறிகள், பழங்கள், கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரமாவது நடக்கலாம். முடிந்தால் நீச்சல் பயிற்சிக்குச் செல்லலாம். தொடர்ந்து யோகா, தியானம் செய்வது நல்ல பலனைத் தரும். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"