கனடாவின் மொண்ட்ரியல் நகரைச் சேர்ந்த ஒருவர் சிறியவயது பெண் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
William Kokesch என்ற 65 வயது மொண்ட்ரியல் மனிதர், அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகளை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களை ஆபாச புகைப்படம் எடுத்து, இணையத்தில் வெளியிட்டு மில்லியன் கணக்கில் பணம் சம்பாதித்தாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட்டார். அவரது வீட்டில் 2000க்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டன.
அவற்றில் பெரும்பாலானவை 6 முதல் 10 வயது குழந்தைகள் படங்கள். இவற்றைப் பார்த்து காவல்துறையினரே அதிர்ந்தனர்.
சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்ட William Kokesch, நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
மீண்டும் திங்கட்கிழமை அவரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மொண்ட்ரியல் காவல்துறை அதிகாரி Const. Dany Richer நமது நிருபரிடம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட William Kokesch என்பவர் Canadian Conference of Catholic Bishops அமைப்பின் இயக்குனராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மேலும் World Youth Day கூட்டங்களுக்கு உதவி புரிபவர் என்றும், டொரண்டோ,ரோம்,பாரீஸ் போன்ற நகரங்களில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு உதவி புரிபவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இப்படிப்பட்டவர் எவ்வாறு ஆபாச படம் எடுத்து விற்பனை செய்ததை போலீஸாரால்கூட நம்பமுடியாததாக இருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவுடன், அவர் வகித்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக விடுவிக்கப்பட்டார்.
இந்த விடயமானது கனடா மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.