செயற்கை முறையில் குழந்தையை உருவாக்க முடியும்! ஆய்வில் தகவல்!!


குழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை முறையில் சோதனை கரு குழாய் மூலம் குழந்தை பேறு பெறுகின்றனர். ஆனால், எதிர்காலத்தில் ஆண், பெண் இன்றி குழந்தை உருவாக்க முடியும்.

இந்த தகவலை இங்கிலாந்து வாழ் இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி  ஆர்த்தி பிரசாத் தெரிவித்துள்ளார். இவர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் எழுதிய லைக் எ விர்ஜின் என்ற அறிவியல் ஆய்வு புத்தகம் வெளியிடப்பட்டது.

அதில் தற்போது பல துறைகளில் அதிவேகமாக அறிவியல் முன்னேறியுள்ளது. அதுபோன்று இனபெருக்க உற்பத்தியிலும் அதி நவீன வளர்ச்சி அடைந்துள்ளோம்.எதிர்காலத்தில் பிளாஸ்டிக் மூலம் செயற்கை கருப்பை தயாரிக்க முடியும். அதில் இயற்கை கருப்பையில் இருக்கும் பேக்டீரியாக்கல் மற்றும் திரவத்தை உருவாக்கலாம்.

குழந்தையை 10 மாதம் சுமக்க பெண் தேவை இல்லை. அதேபோன்று, உயிரணு (விந்தணு) பெற ஆண் தேவையில்லை. ஏனெனில் செயற்கை முறையில் தற்போது அது தயாரிக்கப்பட்டுள்ளது.எனவே, ஆண்-பெண் துணையில்லாமல் செயற்கை முறையில் குழந்தை பெறமுடியும் என தெரிவித்துள்ளார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"