“”இதெல்லாம் நல்லாவா இருக்கு? பாய்ஸ் மட்டுமா கேர்ள்ஸும்ல இப்படி இருக்காங்க.. எங்கயோ சில ஸ்டூடண்ட்ஸ் பண்ணுற தப்புன்னு இத கண்டுக்காம இருக்க முடியாது.. இதுக்குத்தான் காலேஜுக்கு படிக்கப் போறீங்களான்னு யாரும் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லுறது..? ரொம்ப கேவலமா இருக்கு”
தமிழகத்தில் ஏதோ ஒரு கல்லூரியின் மாணவர்கள் போலும். பொறியியல் கல்லூரி மாணவர்கள் என அடையாளப்படுத்துகிறது அந்த வலைத்தளம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு கிணற்றடியில் அந்த மூன்று ஜோடிகள். “”என்னடா இந்த இடத்த லவர்ஸ் பார்க் மாதிரி ஆக்கிட்டோம்”’என்கிறார்கள்.
ஆம்… பேசுவதெல்லாம் தமிழில்தான். அடிக்கின்ற லூட்டியினை கேமரா போன் மூலம் வீடியோ காட்சியாகப் பதிவு செய்கிறாள் ஒரு மாணவி. “அந்தப் பக்கம்.. இந்தப் பக்கம்..’’ எனச் சொல்லி.. ஒட்டி உரசியபடி இருக்கும் ஜோடிகளை படம் பிடிக்கிறாள். அதில் ஒரு மாணவியை இரு மாணவர்கள் கட்டியணைக்கிறார்கள்.
இருவர் கன்னத்திலும் மாறி மாறி முத்த மிடுகிறாள் அந்த மாணவி. இதில் “”போதுமா?”’என்ற கேள்வி வேறு. பதிலுக்கு மாணவர்களும் அவளைப் பாடாய்ப் படுத்துகிறார்கள். வீடியோ எடுக்கும் மாணவி உற்சாகக் குரல் எழுப்ப… மாணவர்கள் தீவிரமாகி றார்கள். “”என் கன்னமே வலிச்சுப் போச்சு. போதும்ப்பா… தாங்க முடியல”’என்று அவள் கெஞ்ச… கேமராவை மறைக்கிறது ஒரு கை. அப்புறம் அங்கே என்ன நடந்ததோ? அந்த மாணவர் களுக்கே வெளிச்சம்.
அந்த வீடியோ காட்சியில் தெரிந்தே தங்களை வெளிச்ச மிட்டுக் காட்டிய மாணவர்கள் கிராமத்து முகங்கள்???