சிலந்தியின் விஷத்தில் ‘வயாக்ரா’ வின் செக்ஸ் உணர்ச்சி


பிரேசிலில் உள்ள சிலந்தியொன்றின் விஷம், ‘வயாக்ரா’ மாத்திரை போல செயல்படுவது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தென்னமெரிக்க நாடான பிரேசிலின் காட்டு பகுதிகளில் ‘போனுட்ரியா நிக்ரிவென்டர்’ என்ற வகை சிலந்திகள் அதிகம் காணப்படுகின்றன. இதன் கொடுக்கில் இருந்து வெளியேறும் திரவம், அதிக விஷத்தன்மை வாய்ந்தது. உலகிலேயே அதிக விஷம் கொண்ட சிலந்திகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

போனுட்ரியா சிலந்தி விஷத்தின் மருத்துவ குணம் பற்றி பிரேசில், அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தினர். சிலந்தியிடம் இருந்து ‘பிஎன்டிஎக்ஸ்2,6’ எனப்படும் விஷம் எடுக்கப்பட்டது. முதுமை காரணமாக செக்ஸ் வாழ்வில் உற்சாகம் குறைந்து காணப்பட்ட எலிகளின் உடலில் இந்த விஷம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர், எலிகளின் ‘மூடு’ அதிகரித்தது. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறியதாவது:

சிலந்தியின் விஷத்தை செலுத்தியதும் எலிகளின் உடலில் நைட்ரிக் ஆக்சைடு சுரப்பு அதிகமாகிறது. இது ரத்த தட்டுகளை விரிவடைய செய்கிறது. ரத்த தட்டுகளின் சுவர்கள் நெகிழ்வு தன்மை அடைகின்றன. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மர்ம உறுப்பு பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் அதிக விரைப்புத்தன்மை கிடைக்கிறது. மருந்தை செலுத்திய 20 நிமிடத்தில் அது வேலை செய்ய தொடங்குகிறது.

ஏறக்குறைய, ‘வயாக்ரா’ போன்ற செக்ஸ் வீரிய மாத்திரைகள் போலவே சிலந்தி விஷம் செயல்படுகிறது. வயதான பிறகு ஏற்படும் விரைப்புத்தன்மை கோளாறுகளுக்கு சிலந்தி விஷம் அருமையான மருந்தாக இருக்கும் என்று தெரிகிறது. ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கிறது. மனிதர்களை வைத்து சோதனை நடத்தி, வெற்றி கிடைத்த பிறகு மருந்தாக அறிமுகப்படுத்தப்படும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"