கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று நாம் தமிழில் கூறுவதைப் பிற மொழிகளில் எப்படிக் கூறுகிறார்கள் என்று கீழே பாருங்கள்...
* ரிஹாஸ்பேல் லெட்டீட்ஸ் (ஆப்ரிக்கா)
*காட் ஜீல் (நார்வே)
*ஷாவாடி பீ மாய் (தாய்லாந்து)
*ஹைவா ஜோலுவா (பின்லாந்து)
*பெலிஸ் நாவிடாட் (சிலி)
*செலாமட் ஹரி நேடால் (மலேசியா)
*செஸ் டிடாமொ போசிக் (யுகேஸ்லோவியா)
*நயா சால் முபாரக் ஹோ (உருது)
*இடா சைடான் வா சானாஹ் ஜடிடாஹ் (அரபிக்)
*கன் டாசோ சன் டான் கங் ஹாவ் சன் (சீனம்)
*ஷங் டான் சுக் ஹா (கொரியா)
*பெலிஸ் நெவிடாட் (ஸ்பெயின்)
*சங் மங் ஜியாங் சின்ஹ் (வியத்நாம்)
*ஜோயெக்ஸ் நோயெல் (பிரான்ஸ்)
*நடோலிக் லாவ்வென் (வேல்ஸ்)
*ஷீவோ நாபா பார்ஷா (வங்காளம்)
*ஷப் நயா வர்ஷ் (மராத்தி)
*ஷப் நயா பராஸ் (இந்தி)
* மாலிகாயன் பாஸ்கோ (பிலிப்பைன்ஸ்)
சிலஅரிய தகவல்கள்
•தமிழ் மொழியில் முதன்முதலில் பைபிளை எழுதியவர் "சீகன்பால்' ஆவார். அவர் தஞ்சை மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்தபோதுதான் அதை எழுதினார்.
•யேசுபிரான் பற்றி கவிதை நூல் எழுதியவர் கிருஷ்ண பிள்ளை இவருக்கு "கிறிஸ்துவ கம்பர்' என்ற சிறப்புப் பெயர் உள்ளது.
•உலகிலேயே மிகப் பெரிய தேவாலயம் வாடிகன் நகரிலுள்ள செயின்ட் பீட்டர் தேவாலயம் ஆகும்.
•உலகிலேயே மிகச் சிறிய தேவாலயம் அமெரிக்காவின் கோரிங்டன் கென்ட்டரி நகரில் உள்ள மெüண்ட் கேசினா ஆகும்.
•இந்தியாவிலேயே மிகப் பெரிய சர்ச் கோவா மாநிலத்திலுள்ள "தி செ கதீட்ரல்' என்னும் தேவாலயம் ஆகும்.
•இந்தியாவிலேயே மிகப் பழமையான தேவாலயம், கேரள மாநிலத்திலுள்ள புனித தாமஸ் தேவாலயம் ஆகும்.
•ஜெருசலத்தில் உள்ள ஒலிவ மலை ஆலயத்தில் 68 மொழிகளில் யேசு அருளிய ஜெபம் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தமிழ் மொழியும் ஒன்று.
•கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலிலிருந்து 20 கி.மீட்டர் தொலைவிலுள்ள நெய்யூர் என்னும் ஊரில் ஒரு தெருவின் பெயர் - கிறிஸ்துமஸ் தெரு.
•உலகத்தின் எல்லா நாடுகளிலும் பொது விடுமுறை அளிக்கப்படுவது யேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் அன்றுதான்.
•கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள "சுங்கர்ன கடை' என்ற இடம் நாகர்கோவிலிலிருந்து 8 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் சிலுவைக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. அருட்பிரசாதமாக வேப்பிலை வழங்கப்படுகின்றது.
•திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள "தோமையார்புரம்' புனித தோமையார் தேவாலயத்தில் பக்தர்கள் வீடு பெருக்கும் "விளக்குமாற்றை' காணிக்கையாக செலுத்துகின்றனர். அப்படி விளக்குமாறை காணிக்கை செலுத்தினால், உடலில் ஏற்படும் பரு, கட்டிகள் நீங்கிவிடும் என்பது பக்தர்
களின் நம்பிக்கை.
•தாம்ஸன் என்ற ஓவியர் தான் வரைந்த ஓவியத்துடன் கிறிஸ்துமஸ் வாழ்த்தினை இங்கிலாந்து அரசருக்கு அனுப்பிவைத்தார். அதைக் கண்டு மகிழ்ந்த அரசர் அந்த ஓவியரைக் கொண்டு பல ஓவியங்களை வரையச் செய்து பலருக்கு அனுப்பிவைத்தார். "லூயிஸ் பிராங்' என்பவர்தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை முதலில் விற்பனைக்குக் கொண்டுவந்தார்.
•கிறிஸ்துவர்கள் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து யேசுவை வணங்கும் வழக்கம் ஜெர்மானியர்களிடமிருந்து வந்தது.
•டென்மார்க் நாட்டில், கிறிஸ்துமஸ் விருந்தில் முதலிடம் வகிப்பது அரிசி உணவுதான்.
•கிறிஸ்துமஸ் என்ற சொல் கி.பி. 1131-ல் இருந்துதான் வழக்கத்திற்கு வந்தது.
•ரோம் - வாடிகன் நகரில் உள்ள போப்பாண்டவர் அரண்மனைதான் உலகிலேயே மிகப் பெரிய அரண்மனை.
•"கிறிஸ்துமஸ்' என்னும் பெயரைச் சூட்டியவர் "கிளமண்ட் முடே' என்ற அமெரிக்க பெண்மணி ஆவார்.
•கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் முறையைத் தோற்றுவித்தவர் அசீசீ நகரில் வாழ்ந்த "புனித பிரான்சிஸ்' என்ற துறவியாவார்.
•யேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததால், அதை நினைவுப்படுத்தும் பொருட்டுதான் மாட்டுக்
கொட்டகை போன்ற குடில் அமைக்கப்படுகின்றது. அதேசமயத்தில் இத்தாலியர்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று மாடுகளை குளிப்பாட்டி அழகுசெய்து மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
•போப்பாண்டவர் வசிக்கும் நகருக்கு வாடிகன் என்று பெயர். வாடிகன் என்றால் "கடவுளிடமிருந்து வரும் வாழ்த்துச் செய்திகளைப் பரப்பும் இடம்' என்று பொருள்.
•"போப்' என்ற சொல் "பாபா' என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும்.
•கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.
•19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் இளவரசர் ஆல்பர்ட்தான் முதன்முதலாக கிறிஸ்துமஸ் மரத்தை வைத்தார்.
•கிறிஸ்துமஸ் பிறப்பை நிர்ணயித்த ஆண்டு, கி.பி. 386, டிசம்பர் 25, புதன்கிழமை ஆகும்.
•கிறிஸ்துமஸ் என்ற திருநாளுக்கு எக்ஸ்மஸ் என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் உள்ள X என்ற எழுத்து கிறிஸ்துவையும் MASS என்பது கூட்டத்தையும் குறிக்கும் வார்த்தைகள். கிறிஸ்துமஸ் பிறந்த நாளில் அவரை வணங்கக்கூடிய கூட்டத்தையே கிறிஸ்துமஸ் என்று அழைக்கின்றனர்.
•யேசுவின் முதல் உருவப்படத்தை வரைந்தவர் புனித லூக்காஸ் என்ற யேசுவின் சீடரே! முதல் ஓவியம் இத்தாலியில் புனித பர்தலோமேயு தேவாலயத்திலும் மற்றொரு படம் போப்பாண்டவரின் அரண்மனையிலும் இடம்பெற்றுள்ளன.
•உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பைபிள் ஆகும்.
•இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதன்முதலில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது.
•உலகின் மிகப் பெரிய பைபிள் 8043 பக்கங்களையும் 500 கிலோ எடையும் கொண்டது.
இந்த பைபிள் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளது.