வைரஸ் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி?


1. ஆண்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் அதை மறந்துவிடக் கூடாது. அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை அப்டேட் செய்திட வேண்டும். அப்போதுதான் அண்மைக் காலத்தில் வந்த வைரஸ்களைக் கண்டறிவ தற்கான புரோகிராம்கள் டவுண்லோட் செய்யப்பட்டு உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் மேம்படுத்தப்படும். எனவே நீங்கள் ஸ்கேன் செய்வதாக இருந்தால் முதலில் இன்டர்நெட் இணைப்பு பெற்று உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் தந்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று அப்டேட் செய்திடவும். அதன்பின் ஸ்கேன் செய்திடவும்.

2. முதலில் உங்கள் ஆண்டிவைரஸ் புரோகிராமினை எப்படி அமைத்திருக்கிறீர்கள் என்று பார்க்கலாம். வழக்கமாக டாஸ்க் பாரில் வலது ஓரத்தில் இதன் ஐகான் இருக்கும். இதனை டபுள் கிளிக் செய்தால் இந்த புரோகிராம் திறக்கப்படும். ஐகான் இல்லையா? ஸ்டார்ட் கிளிக் செய்து புரோகிராம்ஸ் தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் பட்டியலில் ஆண்டி வைரஸ் புரோகிராமைக் காணலாம். அங்கு கிளிக் செய்திடலாம்.

3. இது திறந்தவுடன் உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமின் மெயின் பக்கத்தில் நீங்கள் இருப்பதைக் காணலாம். இதில் இந்த புரோகிராமின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஏதுவான பிரிவுகள் இருக்கும். அனைத்தையும் பார்த்து ஸ்கேன் செய்வதற்கான பட்டனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.

4. ஸ்கேன் டேபைக் கிளிக் செய்தவுடன் குறிப்பிட்ட டிரைவ் அல்லது அனைத்து டிரைவ்களையுமா எனத் தேர்ந்தெடுக்கும் வசதி கிடைக்கும். அனைத்து டிரைவ்களையும் அல்லது முழு கம்ப்யூட்டரையும் ஸ்கேன் செய்திடும் வசதியினைத் தேர்ந்தெடுக்கவும். உடனே ரிபோர்ட் விண்டோ ஒன்று திறக்கப்படும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"