நமது ஆயுட்காலத்தை தீர்மானிக்கும் மரபணுவை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!!


வாழ்க்கையின் சுவாரஸ்யமே நாம் எத்தனை ஆண்டுகள் இந்தப் பூமியில் வாழ்வோம் என்று தெரியாமல் இருப்பதுதான். ஆனால், இப்போது நாம் பிறக்கும் போதே நம்முடைய கடைசி நாள் எது என்பதைக் கண்டுபிடித்து விடமுடியும்.பிறந்ததிலிருந்து எத்தனை ஆண்டுகள் நம் வாழ்க்கை இருக்கும் என்பதை நிர்ணயிக்கும் ஒரு மரபணுவை, வாஷிங்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

குரோமோசோம்களின் முடிவில் உள்ள டெலோமியர்ஸ் (Telomeres) என்ற நுண் அமைப்புகளின் நீளத்தைக் கணக்கிடுவதன் மூலம் ஆய்ளைக் கணித்து விட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது செல்கள் பிரியும்போது குரோமோசோம்களை சிதையாமல் பாதுகாக்கும் டெலோமியர்ஸின் நீளத்தை கணக்கிடுவதன் மூலம் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.

ரத்த செல்களில் டெலோமியர்ஸ்களின் அளவு குறைவாக எவ்வளவு டெலோமியர்ஸ்கள் உள்ளன என்பதைப் பொறுத்து ஆயுளைக் கணித்து விடமுடியும் என்கின்றனர் இந்த லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள். ஏற்கனவே நூற்றுக்கணக்கான பிரிட்டன்வாசிகள் இந்த பரிசோதனையை செய்து கொண்டுள்ளதாக ‘தி இன்டிபெண்டன்ட்’ கூறியுள்ளது.

காப்பீட்டு நிறுவனங்களின் வசதிக்கேற்ப இந்த புதிய பரிசோதனை அனேகமாக வாழ்வின் இன்றியமையாத டெஸ்ட் ஆகிவிடும் என்கின்றனர் இந்த ஆய்வை சடத்திய நிறுவனத்தினர். இன்னும் கூறப்போனால் கொலஸ்ட்ரால் டெஸ்ட் அளவுக்கு இதுவும் இன்றியமையாததாக மாறிவிடும் என்கிறார் ஆய்வை நடத்திய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீபன் மாட்லின்.

டெலோமியர்ஸ் (telomeres) என்பது நம் உடலில் உள்ள ஒரு வகை டி.என்.ஏ. நுண்ணிய இதன் நீளத்தை அளப்பதன்மூலம் நம் வாழ்நாள் எத்தனை ஆண்டுகள் என்பதை சொல்லிவிட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். டெலோமியர்ஸ் என்பது டி.என்.ஏ. வரிசையில் மடிப்புகளாக உள்ள ஒரு வகை. இது குரோமோசோம்களின் நுனியில் காணப்படும். வயது ஆக ஆக இது சீராக வெளியில் போய்க்கொண்டே இருக்கும். இந்த வகை டி.என்.ஏ.வின் நீளத்தை இளம்வயதில் அளந்து பார்த்தால், எத்தனை ஆண்டுகள் நம் வாழ்க்கை சுழற்சி இருக்கும் என்பதை சுலபமாகக் கண்டறிந்து விடலாம் என்று கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஜெப்ரா பின்சஸ் (zebra finches) என்பது 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தென் அமெரிக்காவின் பசிபிக் பகுதியில் இருக்கும் சிறிய பறவை (அயல் நாடுகளில் செல்லப் பறவையாகவும் இதை வளர்க்கிறார்கள்). இதன் ரத்த சிவப்பணுக்களில் உள்ள டெலோமியர்சை எடுத்து அளந்து பார்த்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். முதலில் இந்தப் பறவை, முட்டையிலிருந்து வெளிவந்த 25 நாட்களில் செய்யப்பட்ட டெலோமியர்ஸ் அளவை, அந்தப் பறவை எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும் என்பதற்கு நல்ல கணிப்பாக இருந்ததாகக் கூறுகிறார்கள்.

இந்தப் பறவைகளில் அதிக நீளமான டெலோமியர்ஸ் இருப்பவை மட்டும் அதிகபட்சம் 8 ஆண்டுகள் வாழ்கின்றன. மற்றவற்றின் வாழ்க்கை 5 முதல் 6 ஆண்டுகள் என்று இந்த ஆராய்ச்சி பற்றி விளக்கம் அளித்துள்ளார் ஆராய்ச்சியாளர் பிரிட் ஹெல்டிஞ்சர்.

‘மனிதர்களிடம் இதுவரை இந்த ஆராய்ச்சியை செய்யவில்லை. ஆனாலும் இதுபோன்ற ஆராய்ச்சியை மனிதர்களிடமும் செய்தால், நம்முடைய வாழ்நாளையும் கணித்துவிட முடியும்’ என்று கூறும் பிரிட், ‘மனித வாழ்நாளை நிர்ணயிக்கும் பல விஷயங்களில் இதுவும் ஒன்று. டெலோமியர்ஸ் அழிவது மட்டுமே, வாழ்நாளை நிர்ணயிக்கும் ஒரே விஷயம் என்று நாங்கள் சொல்லவில்லை. வயோதிகம் வருவதற்கு உடலில் ஏற்படும் பல மாற்றங்களே காரணம்’ என்கிறார்.

‘முதலில் பறவைகளை வைத்து செய்த ஆராச்சியின்போது 25 நாட்கள், ஒரு வருடம் அதன்பின் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. முதல்முறை எடுத்ததைப்போல டெலோமியர்ஸ்களின் நீளம் இல்லாமல் குறைந்துகொண்டே வந்தது. அதிலும் அதன் அடர்த்தியும் முதலில் இருந்ததைப்போல இல்லை’ என்று விளக்கியுள்ளார் பிரிட்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"