கால்குலேட்டரின் மூலம் இணையத்தில் உலவலாம்!!


உங்கள் கணினியில் IE , FireFox போன்ற இணைய உலாவிகளில் ஏதேனும் பிரச்சனை உருவாக்கி, வேலை செய்யாமல் போனால், உடனடி உதவிக்கு கால்குலேட்டரை இணைய உலாவியாக பயன்படுத்த இயலும்.

கால்குலேட்டரை திறந்து கொள்ளுங்கள். Help menu, அல்லது F1 அழுத்தி help விண்டோவை திறந்துக் கொள்ளுங்கள்.

இந்த திரையில் இடது மேல் புறத்தில் உள்ள ஐகானை (கேள்விக்குறியுடன் உள்ளது) க்ளிக் செய்யுங்கள்.

இதில் Jump to URL... என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து திறக்கும் வசனப் பெட்டியில் Jump to this URL என்பதற்கு கீழாக உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில் URL ஐ டைப் செய்யுங்கள். (http://www. ஆகியவற்றை சேர்க்க மறவாதீர்கள்)

இது போன்று உங்கள் அபிமான வலைப்பக்கங்களை விண்டோஸ் கால்குலேட்டர் உதவிப் பக்கத்தை கொண்டு திறக்க இயலும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"