கால்களால் அழகிய ஓவியம் வரையும் பெண் (காணொளி இணைப்பு)


ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கால்களால் அழகிய ஓவியங்களை வரைகின்றார்.இவரின் பெயர் Zohreh Etezad Saltaneh. 1962 ஆம் ஆண்டு பிறந்தவர். வயது 49. பிறப்பிலேயே இரு கைகளும் ஊனம் ஆனவர்.ஆயினும் பெற்றோர் இவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை ஊட்டி வளர்த்து இருக்கின்றனர்.

கால்களைப் பயன்படுத்தி அன்றாட காரியங்களை மேற்கொண்டு வருகின்றார்.கால்களைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைகின்றமை ஆரம்பத்தில் முடியாத காரியமாகவே இவருக்கு பட்டது.ஆயினும் நாளடைவில் பழகிக் கொண்டார்.

இப்போது கால்களால் ஓவியம் வரைகின்றமை இவருக்கு மிகவும் இலகுவான காரியம்.
கால்களைப் பயன்படுத்தி எழுதுகின்றமைக்கும், ஓவியம் வரைகின்றமைக்கும் முடியும் என்று சிறுவயதில் இருந்தே பெற்றோர் உணர்த்தி வந்தனர் என்று நினைவு கூருகின்றார்.

இவர் உலக அளவில் ஏராளமான விருதுகளை ஓவியப் படைப்புக்களுக்காக வென்று உள்ளார்.
60க்கும் மேற்பட்ட நாடுகளில் இவரின் ஓவியங்கள் கண்காட்சிகளின் போது காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

சர்வதேச ஓவியர் சங்க உறுப்பினராக அங்கம் வகிக்கின்றார்.இவர் தத்துவத் துறையில் முதுமாணிப் படிப்பை மேற்கொண்டு வருகின்றார்.ஊனம் ஒரு தடை அல்ல என்பது இவரின் தாரக மந்திரம்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"